August 30, 2025
  • August 30, 2025
Breaking News
November 19, 2020

தமிழக காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் கட்டாய விடுமுறை வருகிறது

By 0 1075 Views
அனைத்து காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுடன் தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் காவலர்கள் பணியாற்றும் நேரம், விடுப்பு முறை மற்றும் பணி நாள் குறித்து பல்வேறு அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டது.   
 
இதனை தொடர்ந்து மற்ற மாவட்ட பணி விதிகள்படி வாரத்தில் 6 நாள் வேலை பார்த்தால், ஒரு நாள் விடுப்பு வழங்க, தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது.
 
குறிப்பாக கொரோனா காரணமாகவும், உடல்நிலை சரியில்லாமலும், மன உளைச்சல் காரணமாக காவலர்கள் அதிகம் உயிரிழப்பதை தடுக்க, வார விடுப்பை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
வாரத்தில் ஏதாவது ஒரு நாள் விடுப்பும் ஞாயிற்றுக்கிழமை விடுப்பை சுழற்சி முறையில் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.