October 26, 2025
  • October 26, 2025
Breaking News
June 14, 2019

விஜய் சேதுபதி அமலா பால் இணையும் விஎஸ்பி 33

By 0 828 Views

விஜய் சேதுபதி நடிக்கும் 33 வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. தொடர்ந்து படக்குழுவினர் ஊட்டியில் படப்பிடிப்பைத் தொடர திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக இசக்கி துரை தயாரிக்கிறார்.

‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தனது உதவியாளர் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தை எஸ்.பி ஜனநாதன் க்ளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைக்கிறார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேசஅளவிலான பிரச்சனையும் மையமாக பேசப்பட இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி இசைk கலைஞராக நடிக்கிறார்.

இப்படத்தின் பெயரை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் படக்குழுவினர் தற்காலிகமாக விஎஸ்பி 33 (VSP 33) என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.

‘விஎஸ்பி 33’ படத்தில் முன்னணி கதாநாயகி மற்றும் ஒரு வெளிநாட்டு பெண்ணும் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர். இதில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைளை புது வித பாணியில் அறிமுகப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்துக்கு இசை, நிவாஸ் கே. பிரசன்னா. ஒளிப்பதிவின் பொறுப்பேற்கிறார் மகேஷ் முத்துசுவாமி.

VSP 33 Starts in Palani

VSP 33 Starts in Palani