December 1, 2025
  • December 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விவேகம் படத்தால் தயாரிப்பாளருக்கு தொடரும் தலைவலி
September 22, 2019

விவேகம் படத்தால் தயாரிப்பாளருக்கு தொடரும் தலைவலி

By 0 882 Views

தமிழ்ப்படத் துறையில் நல்ல தயாரிப்பாளர்களில் ஒருவர் என்றால் அது சத்யஜோதி தியாகராஜன்தான். பாரம்பரிய சினிமாக் குடும்பத்தைச் சேர்ந்த அவரது அடுத்த தலைமுறையும் சினிமாவுக்குள்ளேயேதான் இருந்து வருகிறது.

அதேபோல் ஹீரோக்களில் நற்பண்புகள் நிரம்பியவர் என்று பெயர் எடுத்தவர் அஜித். தயாரிப்பாளரோ, இயக்குநரோ அவருக்குப் பிடித்த வகையில் அமைந்துவிட்டால் அவர்களுக்கு தன்னால் லாபம் வராமல் ஓய மாட்டார்.

தியாகராஜன் தயாரிப்பில் அஜித் நடித்த ‘விவேகம்’ படம் சரியாகப் போகவில்லை என்பதால் அதே கூட்டணியில் அடுத்து ‘விஸ்வாசம்’ படம் நடித்துக் கொடுத்து மிகப்பெரிய வெற்றியைத் தேடிக்கொடுத்தார் அஜித். 

ஆனால், இந்த நற்குணங்கள் எல்லாம் சினிமா வியாபாரத்தில் சில வேளைகளில் எடுபடுவதில்லை. 

இந்த ‘விவேகம்’ படத்தில் வெளிநாட்டு உரிமை வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட, அது தொடர்பாக சத்யஜோதி தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எது எப்படி இருந்தாலும், மிஸ்டர் கிளீன் என்று பெயரெடுத்த தியாகராஜன் இதிலிருந்து மீண்டு வருவார் என்று நம்பலாம்..!