September 15, 2026
  • September 15, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தமிழ் தெலுங்கு இந்தியில் சீயான் நடிக்கும் விக்ரம் 58
May 20, 2019

தமிழ் தெலுங்கு இந்தியில் சீயான் நடிக்கும் விக்ரம் 58

By 0 1032 Views
Ajay Gnanamuthu

Ajay Gnanamuthu

கோலிவுட்டுக்கே கொண்டாட்டச் செய்தியை தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். அது என்ன தெரியுமா..? அவரது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், Viacom 18 Studios நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் புதியபடத்தை அஜய் ஞானமுத்து இயக்க சீயான் விக்ரம் நடிக்க இருக்கிறார் என்பதுதான்.

 
நடிப்பு என்ற மகத்தான கலைக்காக தன் சப்தநாடிகளையும் திரையில் ஒப்படைக்கும்  கம்பீர மனம் படைத்தவர் சீயான் விக்ரம். அதேபோல் தான் இயக்கிய ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய இரண்டு படங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்து கெத்து காட்டியவர் அஜய் ஞானமுத்து.
 
இந்த இருவரும் ஒன்றிணையும் ‘விக்ரம் 58’ என்ற இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. 2020-ல் சம்மர் கொண்டாட்டமாக ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது. மற்ற நட்சத்திரங்கள் யாரெல்லாம் இப்படத்தில் இருக்கிறார்கள் என்ற தகவலும் டெக்னிஷியன்ஸ் டீம் யார் யார் என்ற தகவலும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. 
 
Vikram 58

Vikram 58

ஆக்‌ஷன் த்ரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப்பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்சன் வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராக இருப்பதால் இந்திய சினிமாவில் இது மிக முக்கியமான படமாக இருக்கும்.