July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய் சேதுபதியுடன் ஆட்டம் போடும் வீடியோ காயத்ரி வெளியிட்டார்
April 21, 2019

விஜய் சேதுபதியுடன் ஆட்டம் போடும் வீடியோ காயத்ரி வெளியிட்டார்

By 0 1132 Views

விஜய் சேதுபதி ரொம்ப கூலான மனிதர் என்பதும், மற்றவர்களிடம் ஜோவியலாகப் பழகக்கூடியவர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். 

அதில் ‘ப்ப்பா…’ காயத்ரி என்றால் கொஞ்சம் கூடுதலான குஷியுடனேயே இருப்பார். அப்படி சமீபத்தில் வெளீயான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்த காயத்ரியுடன் அவர் குஷியாக டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

இதை வெளியிட்டது காயத்ரியேதான். படத்தின் இடைவேளைகளில் சும்மா அரட்டை அடிக்காமல் இப்படி இருவரும் டான்ஸ் பிராக்டிஸ் செய்து வந்தது இந்த வீடியோவைப் பார்த்ததும்தான் தெரிகிறது.

வழக்கமாக பெண்களுக்கு எளிதாக நடனமாட வரும். ஆனால், இதில் காயத்ரி ஆடும் நடனத்தை விட விஜய் சேதுபதி போட்ட ஆட்டம்தான் சூப்பராக இருக்கிறது. அதுவும் திருநங்கை வேடத்தில் அவர் இருப்பது கூடுதல் சுவாரஸ்யம் தருவதாக இருக்கிறது.

கீழே வீடியோவில் நீங்களே பாருங்கள்…