January 23, 2025
  • January 23, 2025
Breaking News
April 21, 2019

இரண்டு நாளில் 53 கோடி வசூல் காஞ்சனா 3 சாதனை

By 0 1216 Views

சன் பிக்சர்ஸ் தயாரித்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் 3 ஆவது பாகம் நேற்று முன் தினம் 19 ஏப்ரல் அன்று வெளியானது.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நாளில் வெளியாகி இரு மொழிகளிலும் வரவேற்கப்பட்ட படமாக அமைந்தது.

இரு மொழிகளிலும் பெரிய ஒப்பனிங் கிடைத்துள்ளது. இதற்குக் காரணம் முந்தைய இரண்டு பாகங்களும் மக்களால் ரசிக்கப்பட்டதுதான். கடந்த இரு தினங்களில் மட்டும் இந்தப்படம் தமிழில் சுமார் 43 கோடிகளும், தெலுங்கில் 10 கோடிகளும் வசூலித்திருக்கிறதாம்.

ஆக மொத்தம் இரண்டு நாள்களில் காஞ்சனா 3 வசூலித்த மொத்த 53 கோடி என்கிறார்கள்.

உச்ச ஹீரோக்களின் படங்களுக்கு நிகரான வசூல் என்பதால் தமிழ், தெலுங்கு திரையுலகம் இந்த வசூலைப் பார்த்து ஆச்சரியத்தில் மிரண்டிருக்கிறது. இன்னும் இரண்டொரு தினங்களிலேயே இதன் வசூல் 100 கோடியைத் தாண்டும் என வியாபார வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

காஞ்சனா 4 ம் ரெடியாகிடும் போலிருக்கே..!?