January 22, 2025
  • January 22, 2025
Breaking News
April 22, 2019

வெங்கட்பிரபு வில்லன் ஆனது எதற்காக..?

By 0 806 Views

சினிமாவில் நடிப்பு மட்டுமன்றி அதன் வியாபாரத்திலும் காலூன்றி தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நிதின்சத்யா.

“ஜருகண்டி” படத்திற்கு பிறகு தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத் – எ நிதின்சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நிதின்சத்யா புதிய படமொன்றை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

தனது தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படமான இப்படத்தில் வைபவ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க, உடன் ஈஸ்வரி ராவ்,  பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Venkatprabhu

Venkatprabhu

வைபவை தெறிக்கவிடும் வில்லனாக இயக்குனர் வெங்கட்பிரபு நடிக்கின்றார். இவர் வில்லனாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய SG சார்லஸ் இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.

தற்போது இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.