April 25, 2024
  • April 25, 2024
Breaking News
April 22, 2019

விஜய்சேதுபதி ஸ்ருதிஹாசனால் ஜனநாதன் பெற்ற லாபம்

By 0 663 Views

‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘ஜுங்கா’, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும், ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’, ‘ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன்’ ஆகிய படங்களைத் தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு மிகப்பிரம்மாண்டமான படத்தைத் தயாரிக்கின்றன. படத்தின் பெயர் ‘லாபம்’.

இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார்.

லாபம் படத்தில் முதன்முதலாக அவர் நடிகர் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார். இவர்களோடு ஜெகபதிபாபுவும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என அறமும் அரசியலும் பேசிய படங்களைத் தந்த தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் ‘லாபம்’ படத்தை இயக்குகிறார். இவரின் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருக்கிறது. இன்று பூஜையோடு ராஜபாளையத்தில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.

தரமான படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டு பருத்திவீரன், இரண்டாம் உலகம் , தனி ஒருவன் ஆகிய படங்களில் ஒளிப்பதிவில் தனித்துவத்தை நிறுவிய ஒளிப்பதிவாளர் ராம்ஜியும் லாபத்தில் இணைந்து படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறார்.

இசை அமைப்பாளர் டி.இமான் இப்படத்தில் இசை அமைப்பாளராக பங்கெடுத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

தயாரிப்பாளர்களுக்கும் லாபம் வந்தால் சரி..!