April 19, 2025
  • April 19, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • லோகேஷ் கனகராஜின் கைதி வெற்றிக்கு விஜய் கொடுத்த பரிசு
October 28, 2019

லோகேஷ் கனகராஜின் கைதி வெற்றிக்கு விஜய் கொடுத்த பரிசு

By 0 1156 Views

சினிமாவின் கதைக்குள்ளேதான் ஆச்சரியங்கள் நடக்குமென்பதில்லை. கதைக்கு வெளியிலேயும் அந்த ஆச்சரியங்கள் நடக்கலாம்.

இப்போது விஜய் 64 படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் அந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த தீபாவளிக்கு லோகேஷ் இயக்கிய ‘கைதி’, விஜய்யின் ‘பிகிலு’டன் மோதியது. இதில் ஒட்டுமொத்த ரசிகர்களின் தீர்ப்பும் ‘பிகில்’ படத்தைவிட ‘கைதி’ சிறப்பாக வந்திருக்கிறது என்பதே.

இதனால் தன் அடுத்த படம் லோகேஷின் இயக்கத்தில் அமைந்திருப்பதால் மகிழ்ச்சியுடன் இருக்கும் விஜய் , எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக அவரது இயக்கத்தில் இன்னொரு படத்திலும் நடிக்கும் முடிவில் இருக்கிறாராம்.

அந்தப்படம் அநேகமாக ‘விஜய் 66’ படமாக இருக்கலாம் என்ற செய்தி கோலிவுட்டில் வெகு வேகமாகப் பரவி வருகிறது.

கைதி படத்தின் வெற்றிக்கு கார்த்தி அல்லவா லோகேஷுக்குப் பரிசு கொடுத்திருக்க வேண்டும்? மாறாக விஜய் கொடுத்து விட்டார்.

யார் கொடுத்தால் என்ன? மொத்தத்தில் லோகேஷ் கனகராஜ்தான் ‘கொடுத்து வைத்தவர்..!’