April 19, 2024
  • April 19, 2024
Breaking News

Tag Archives

ரஷ்ய மொழியில் வெளியாகும் கார்த்தியின் கைதி

by on February 18, 2022 0

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் கார்த்தி நடித்த படம் ‘கைதி’.  2019-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையைப் புரிந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசூல் சாதனை மட்டுமன்றி பல்வேறு விருதுகளையும் குவித்தது. தென்னிந்திய மொழிகளில் சாதனையைப் புரிந்த ‘கைதி’, இந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது. தற்போது ‘கைதி’ படத்துக்கு மற்றுமொரு மகுடமும் கிடைத்துள்ளது. ரஷ்ய மொழியிலும் […]

Read More

லோகேஷ் கனகராஜின் கைதி வெற்றிக்கு விஜய் கொடுத்த பரிசு

by on October 28, 2019 0

சினிமாவின் கதைக்குள்ளேதான் ஆச்சரியங்கள் நடக்குமென்பதில்லை. கதைக்கு வெளியிலேயும் அந்த ஆச்சரியங்கள் நடக்கலாம். இப்போது விஜய் 64 படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் அந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த தீபாவளிக்கு லோகேஷ் இயக்கிய ‘கைதி’, விஜய்யின் ‘பிகிலு’டன் மோதியது. இதில் ஒட்டுமொத்த ரசிகர்களின் தீர்ப்பும் ‘பிகில்’ படத்தைவிட ‘கைதி’ சிறப்பாக வந்திருக்கிறது என்பதே. இதனால் தன் அடுத்த படம் லோகேஷின் இயக்கத்தில் அமைந்திருப்பதால் மகிழ்ச்சியுடன் இருக்கும் விஜய் , […]

Read More

லாரி டிரைவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன் – கார்த்தி

by on October 28, 2019 0

‘கைதி’ படம் அனைத்து ஏரியாக்களிலும் அற்புதமாக ஓடிக்கொண்டிருக்கும் மகிழ்ச்சியில் தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ள பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கார்த்தி. அப்போது அவர் பேசியதிலிருந்து… “கைதி’ படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த செட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இந்த கலாச்சாரத்தை இனிமேல் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும். படம் […]

Read More

கைதி திரைப்பட விமர்சனம்

by on October 25, 2019 0

அதென்னவோ, இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு இரவின் மேல் அப்படியொரு காதல். தன் முதல் படத்தில் ஒரு இரவில் நடந்த ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை ஒரு மாலையாகக் கட்டியவர், இந்தப்படத்தில் மாலையை உதிர்த்தது போல் ஒரே கதைக்குள்ளிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளைச் சிதறி விட்டு ரசிக்க வைத்திருக்கிறார். நகரில் பரவிக்கொண்டிருக்கும் போதை சாம்ராஜ்யம்தான் அடித்தளம். அப்படி 800 சொச்சம் கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் போலீஸ் வசம் சிக்க, அதை வைத்து அந்த கும்பலின் மூளையானவனைப் பிடிக்க போலீஸ் […]

Read More

கைதி படத்தை விஜய் இன்னும் பார்க்கவில்லை – லோகேஷ் கனகராஜ்

by on October 24, 2019 0

நாளை தீபாவளி வெளியீடாக ‘கைதி’ வெளியாவதாலும், அடுத்து விஜய்64 படத்தை இயக்கி வருவதாலும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய கைதி தீபாவளிக்கு ரிலீஸாகிறது. படவெளியீட்டை முன்னிட்டு அவர் பத்திரைகையாளர்களை சந்தித்தார்.  “என் முதல் படமான ‘மாநகரம்’ படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது நீங்கள்தான். ‘கைதி’ முடியும் போதே எனது அடுத்த பட வேலைகள் ஆரம்பித்து விட்டன. அதனால் உங்களை சந்திக்க முடியவில்லை. இந்த தீபாவளி தின […]

Read More

கைதில நடிக்க கார்த்திக்கு நிறைய தைரியம் – நரேன்

by on October 19, 2019 0

கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகும் ‘கைதி’ பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் டிரைலரை கொண்டாடி வருகின்றனர். ‘அஞ்சாதே’ புகழ் நரேன் படத்தில் இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை டிரைலர் சொன்னது. அவருடன் பேசியதிலிருந்து… “நல்ல படத்திற்காக காத்திருந்தேன். நான் கடைசியாக நடித்த படம் ‘யூ டர்ன்’. அதற்குப் பிறகு அதர்வாவுடன் ‘ஒத்தைக்கு ஒத்தை’ படத்துல ஒரு கேரக்டர் நடிச்சிருக்கேன். சுசீந்தரன் சாரோட சாம்பியன் […]

Read More

தீபாவளிக்கு உறுதி செய்யப்பட்ட ஒரே படம் கைதி கேலரி

by on October 12, 2019 0

தீபாவளிக்கு வெளியாவதாக மூன்று படங்கள் சொல்லப்பட்டன. விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியிருக்கும் ‘பிகில்’, கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் ‘கைதி’ மற்றும் விஜய்சேதுபதி நடிக்க, விஜய்சந்தர் இயக்கியிருக்கும் ‘சங்கத் தமிழன்’ இவை மூன்றும்தான் அந்தப் படங்கள். இதில் ஏற்கனவே வெளியாக அநேக சாத்தியங்கள் இருந்தும் தீபாவளிக்காக ஒத்தி வைத்த ‘சங்கத் தமிழன்’ வெளியாக வாய்ப்பில்லையென்று படத்தை வெளியிடும் லிப்ரா புரடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் சொல்லிவிட, அரசியல் பின்னணி சிக்கல்களால் ‘பிகில்’ வெளியீடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. […]

Read More

விஜய் கார்த்தியுடன் மோத தமன்னாவுக்கு என்ன தில் ?

by on September 19, 2019 0

வரும் தீபாவளிக்கு விஜய்யின் ‘பிகில்’ வரத் தயராகிக் கொண்டிருக்க, அந்தப்படத்துடன் கார்த்தி நடிக்கும் ‘கைதி’யும் வெளியாகவிருக்கிறது. கார்த்தியின் ‘கைதி’யை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜே விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் நிலையில் பிகிலை ஆதரிக்கும் விஜய் ரசிகர்கள் ‘கைதி’ படத்தைப் போட்டியாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்கிற நிலையில் ‘கைதி’ வருவதில் பிரச்சினையில்லை. இந்நிலையில் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழனு’ம் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ளும் என்று ஆரம்பித்துக் கடைசியில் தீபாவளிக்கு முன்னதாகவே வெளிவரவிருக்கிறது. இந்நிலையில் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் […]

Read More