October 30, 2025
  • October 30, 2025
Breaking News
January 20, 2019

தீபாவளிக்கு விஜய்யுடன் போட்டியிடப் போவது யார்?

By 0 963 Views

இன்று அட்லீ இயக்கத்தில் விஜய் 63 படம் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. கல்பாத்தி அகோரம் ஏஜிஎஸ் சார்பாக தயாரிக்கும் இந்தப்படத்தில் விஜய்யின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் விளையாட்டுத் துறையில் நடக்கும் அரசியலைக் குறிவைக்கிறதாம். விஜய் நடித்த படங்களிலேயே அதிக செலவில் பிரமாண்டமாகத் தயராகும் இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக இப்போதே உறுதி அளித்திருக்கிறார்கள்.

ஆக, இப்போது பொங்கலுக்கு ரஜினியும், அஜித்தும் மோதியதைப் போல் வரும் தீபாவளிக்கு விஜய்யுடன் மோத இன்னொரு பெரிய ஹீரோவின் படத்தை எதிர்பார்க்கலாம்.

போட்டி வந்தால் மட்டுமே பெரிய லாபம் பார்க்கலாம் என்பதை இந்தப் பொங்கல் நன்றாகவே புரிய வைத்துவிட்டது.

அதற்கான யூகங்களைத் தொடங்கும் வேளை வந்து விட்டதாகவே தொடங்குகிறது. அது அநேகமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அமையும் ரஜினி படமாக இருக்குமா என்பது தெரியவில்லை.

என்னமும் நடக்கும் பார்க்கலாம்..!