September 15, 2025
  • September 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நான்கு மாதத்தில் குழந்தை பெற்ற நயன்தாரா விக்னேஷ் ஜோடி – பின்னணி தகவல்
October 9, 2022

நான்கு மாதத்தில் குழந்தை பெற்ற நயன்தாரா விக்னேஷ் ஜோடி – பின்னணி தகவல்

By 0 971 Views

சினிமாவில் மட்டும்தான் திருப்பங்கள் நேரும் என்பது இல்லை. சினிமாக்காரர்கள் வாழ்விலும் ஏகப்பட்ட அதிசயங்களும் திருப்பங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதில் சமீபத்திய அதிசயம் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி குழந்தை பெற்றிருப்பது.

கடந்த ஜூன் மாதம்தான் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு திருமணம் ஆனது. இந்நிலையில் 4 மாதங்களே ஆகியிருக்க தங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக அதுவும் – இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

அதைப் பார்த்த நெட்டிசன்கள் 4 மாதத்தில் குழந்தையா என்று இருவரையும் கலாய்த்தும், கழுவி ஊற்றியும் வருகிறார்கள்.

ஆனால் கடந்த மாதங்களில் நயன்தாராவின் வயிறு பெரிதாக இருந்ததாகவோ அவர் கர்ப்பமானதாகவோ தகவல் இல்லை.

பின்னர் எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தது..?

இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது. இந்த செய்தியை அவர்கள் இருவரும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

நயன்தாராக்கு வயதாகி விட்டதாலும் பல படங்களில் நடிக்க வேண்டி இருப்பதாலும் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஏழு வருடங்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்த அவர்களுக்கு இப்படி வாடகைக்கு மூலம் குழந்தை பெறுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லைதான்.

எப்படியோ அவர்களுக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்..!