April 26, 2024
  • April 26, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • காதல் மூலம் வாழ்வை மாற்றித் தரும் முயற்சியில் வாணி போஜன்
February 11, 2020

காதல் மூலம் வாழ்வை மாற்றித் தரும் முயற்சியில் வாணி போஜன்

By 0 615 Views

டிவி தொடர்கள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர் நெஞ்சங்களை வென்ற நடிகை வாணி போஜன் ‘ஓ மை கடவுளே’ படம் வழியாக சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.

‘ஓ மை கடவுளே’ படத்தின்  பெரும் பலமாக மாறியிருக்கிறார் அவர் என்றால் மிகையில்லை. ரசிகர்கள் அவரை பெரிய திரையில் காண பெரும் ஆவலுடன் உள்ளனராம்.

இது பற்றி என்ன சொல்கிறார் வாணி..?

“பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு மிகவும் கவனமாக, தேர்ந்தெடுத்த பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறேன். தெலுங்கில் ஒரு மிகப்பெரும் ஹிட் அறிமுகத்துக்கு பிறகு தமிழில் ஒரு அற்புதமான வாய்ப்பாக ‘ஓ மை கடவுளே’ படம் அமைந்திருக்கிறது. காதல் கதைகளுக்கென்றே ஒரு வடிவம் இருக்கும். ஆனால் இயக்குநர் அஷ்வத் அதில் ஃபேண்டஸி தன்மையை புகுத்தி படத்தை மேலும் வெகு அழகாக மாற்றிவிட்டார்.

Ashok Selvan Vani Bhojan

Ashok Selvan Vani Bhojan

மேலும் இப்படம் புதிதாக காதலிக்கும் இளைஞர்கள், காதலில் வெகு காலம் பயணம் செய்பவர்கள், காதல் தம்பதியர் என அனைவருக்கும் வாழ்வின் பார்வையை மாற்றித்தரும். இதில் என் பங்கும் இருப்பது சிறப்பு. அசோக் செல்வனின் சிறந்த நடிப்பு இப்படத்திற்கு பிறகு வெகுவாக பேசப்படும். இப்படத்திற்கு பிறகு அவர் பெரும் உயரங்களுக்கு செல்வார். ரித்திகா சிங்கின் துடிப்பான நடிப்பு அவரை அனைவர் மனங்களிலும்  குடியிருக்க செய்யும்..!” என்கிறார் வாணி முறுவல் பூத்தபடி.

குறும்படங்கள் மூலம் கவனம் வென்ற இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கியுள்ளார்.

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படத்தை Axess Film Factory  சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து  தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.