February 27, 2020
  • February 27, 2020
Breaking News

Tag Archives

புதிய முயற்சிகளுக்கு என் கதவுகள் திறந்தே இருக்கும் – டில்லி பாபு

by on February 19, 2020 0

கடந்தவாரம் வெளியான ‘ஓ மை கடவுளே’ நான்காவது நாளாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓட, அதை ஒரு வெற்றிவிழாவாகக் கொண்டாடி விட்டனர் ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் அபிநயா செல்வம். மகிழ்ச்சியில் மிதந்த ரித்திகா சிங், “இது என் வாழ்க்கையில் முக்கியமான படம். உயர்வான விமர்சனங்கள் தந்த அனைவருக்கும் நன்றி. என்னையும் இந்த டீமின் அங்கத்தினராக ஏற்றுக்கொண்டு நடத்திய அனைவருக்கும் நன்றி..!” என்றதைத் தொடர்ந்து “இந்தப்படத்தைப் பார்த்து பிரிந்த […]

Read More

ஓ மை கடவுளே திரைப்பட விமர்சனம்

by on February 14, 2020 0

வாழ்க்கையில் ஒரு பிரச்சினை வரும்போது “ஓ மை காட்…” என்று எரிச்சலடைவோம் இல்லையா..? அப்போது அந்தக் கடவுள் நேரே வந்து “என்ன உன் பிரச்சினை..?” என்று அதைத் தீர்த்து வைக்க முயன்றால் என்ன ஆகும்..? என்ற சுவாரஸ்யமான ஃபேன்டஸி வித் ரோம் காம் ஜேனர் படம்தான் இது.   நாயகன் அசோக் செல்வன், ரித்திகா சிங், ஷாரா மூவரும் நண்பர்கள். அசோக் செல்வன் அரியரில் இஞ்சினீயரிங் முடித்தவர். இந்நிலையில் ரித்திகாவுக்கு அவரது அப்பா எம்.எஸ்.பாஸ்கர் மாப்பிள்ளை பார்க்க, […]

Read More

காதல் மூலம் வாழ்வை மாற்றித் தரும் முயற்சியில் வாணி போஜன்

by on February 11, 2020 0

டிவி தொடர்கள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர் நெஞ்சங்களை வென்ற நடிகை வாணி போஜன் ‘ஓ மை கடவுளே’ படம் வழியாக சினிமாவுக்கு அறிமுகமாகிறார். ‘ஓ மை கடவுளே’ படத்தின்  பெரும் பலமாக மாறியிருக்கிறார் அவர் என்றால் மிகையில்லை. ரசிகர்கள் அவரை பெரிய திரையில் காண பெரும் ஆவலுடன் உள்ளனராம். இது பற்றி என்ன சொல்கிறார் வாணி..? “பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு மிகவும் கவனமாக, தேர்ந்தெடுத்த பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறேன். தெலுங்கில் ஒரு […]

Read More

கை படாமல் நடிப்பது எப்படி – பாக்ஸர் நடிகை வேதனை

by on February 9, 2020 0

கிக் பாக்ஸிங் சேம்பியன் ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் நடிகையானார். அதிலும் குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்திருந்தார். தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கடவுளே திரைப்படம் காதலர் தினத்தன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில் ரித்திகா சிங் தனது சமீபத்திய பேட்டியில், ‘தமிழில் நான் நடித்த முதல் படம் வெற்றி பெற்றாலும் அதன் பிறகு அதிக பட வாய்ப்புகள் கிடைக்காதது எனக்கு பெரிய வருத்தம் தான். ஒருவேளை நான் ஹிந்தி, தெலுங்கு படங்களுக்கு சென்றது கூட […]

Read More

கடவுளாக நடிக்க விஜய் சேதுபதி காசு வாங்கினாரா வீடியோ இணைப்பு

by on February 6, 2020 0

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்கள். இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படம் குறித்து அசோக் செல்வன் பேசும் போது , ‘ஓ மை கடவுளே’ என் வாழ்வில் முக்கியமான படம். ரொம்ப வருஷமாக அஷ்வத்தை எனக்கு தெரியும். இரண்டுபேரும் சேர்ந்து […]

Read More

பாக்ஸர் க்காக அருண்விஜய் பயிற்சி அரிய வீடியோ

by on May 29, 2019 0

நடிகர் அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த உடனேயே, அவரது அர்ப்பணிப்பு குறித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பற்றிக் கொண்டது. இந்தப் படத்துக்காக பீட்டர் ஹெய்ன் போன்ற ஒரு வழிகாட்டியுடன், வியட்நாமில் அமைந்துள்ள உலகின் மிகவும் புகழ்பெற்ற தற்காப்புக் கலை பயிற்சி மையமான ‘லின் பாங்’கில் அருண்விஜய் பயிற்சி பெறும் தகவலும் வீடியோவும் இப்போது வெளியாகியிருக்கிறது. இதுபற்றி படத்தின் இயக்குனர் விவேக் கூறும்போது, “அருண் விஜய் சார் ஒரு மாத கால […]

Read More