July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ரசிகர்களுடன் வலிமை பார்க்க பிரான்ஸ் செல்லும் ஜான்வி கபூர்
February 17, 2022

ரசிகர்களுடன் வலிமை பார்க்க பிரான்ஸ் செல்லும் ஜான்வி கபூர்

By 0 825 Views

உலகின் மிகப்பெரிய திரையரங்கமான பாரிஸின் Le Grand Rex தியேட்டரில் வலிமை படம் திரையிடப்பட உள்ளது. பிப்ரவரி 25,26,28 ஆகிய நாள்களில் வலிமை படம்  Le Grand Rex Theatre Paris -ல் திரையிடப்படுகிறது.

2800 இருக்கைகளைக் கொண்ட ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையில் வலிமை படம் திரையிடப்பட உள்ளது பிரான்ஸ் வாழ் இந்தியர்களை குஷிப்படுத்தி உள்ளது.

இந்த தகவலை நடிகை ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில் அறிவித்து விரைவில் அஜித் சார் ரசிகர்களையும், பிரான்ஸ் மக்களையும் சந்திக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் வலிமை படத்தை உலகின் மிகப்பெரிய திரை அரங்கில் (Le Grand Rex Theatre Paris) காண ஜான்வி கபூர் செல்ல உள்ளதாக தெரிகிறது. 

ஒரே நேரத்தில் பிரான்ஸ் ரசிகர்களுக்கு இரண்டு சர்ப்ரைஸ்கள்..!