September 16, 2025
  • September 16, 2025
Breaking News
October 14, 2018

நான் நல்லவனா கெட்டவனா என்று இப்போது முடிவெடுக்காதீர்கள் – வைரமுத்து

By 0 1350 Views

நாடெங்கும் புயல் வீசிக்கொண்டிருக்கும் ‘மி டூ’ விவகாரத்தில் சமீபத்தில் கவியரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி தொடுத்திருந்த பாலியல் குற்ற ச்சாட்டுகள் கவிஞரைப் பார்த்து ‘யூ டூ..?’ என்ற கேள்வியை முன்வைத்தது.

அதற்கு டிவிட்டரில் காலம் பதில் சொல்லும் என்று கூறியிருந்த கவிஞர் இன்று காணொளியில் ஒரு விளக்கம் கூறியிருக்கிறார். அதிலிருந்து….
 
“என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்ற ச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை. உள்நோக்கம் கொண்டவை. அவை உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்குத் தொடுக்கலாம். சந்திக்கக் காத்திருக்கிறேன்.
 
மூத்த வழக்கறிஞர்களோடும், அறிவுலகின் ஆன்றோர்களோடும் கடந்த ஒரு வார காலம் ஆழ்ந்து ஆலோசித்து வந்தேன். அசைக்க முடியாத ஆதாரங்களைத் தொகுத்து வைத்திருக்கிறேன். என்மீது நீங்கள் வழக்குத் தொடுக்கலாம். சந்திக்கக் காத்திருக்கிறேன்.
 
நான் நல்லவனா கெட்டவனா என்று நீங்கள் இப்போது முடிவெடுக்கத் தேவையில்லை. நீதி மன்றம் சொல்லட்டும். நீதிக்குத் தலை வணங்குகிறேன்..!”