August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிரிக்க வைக்கும் வடிவேலு அழுது வெளியிட்டுள்ள வீடியோ
March 27, 2020

சிரிக்க வைக்கும் வடிவேலு அழுது வெளியிட்டுள்ள வீடியோ

By 0 904 Views

இன்றைக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசும், மாநில அரசுகளும் ஊரடங்கு அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்க, வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களுக்கான ஆறுதல்களில் தலையாயது வடிவேலுவை வைத்து வலம் வரும் மீம்ஸ்கள்தான்.

எது பற்றிய விஷயமாக இருந்தாலும் அது வடிவேலு முகத்துடன் மீம்ஸாக வரும்போது நம் கவலையை மறக்க வைக்கிறது. காமெடி சேனல்களில் வரும் அவரது நகைச்சுவைப் பகுதிகளும் நம்மைக் களிப்புடனேயே வைத்திருக்கின்றன.

இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க அனைவரும் வீட்டில் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அவர் கண்ணீர் மல்கி பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அது கீழே…