October 27, 2025
  • October 27, 2025
Breaking News
January 7, 2020

நம்ம தலையை மறைக்க முடியுமா அண்ணே? வடிவேலு கலாய்

By 0 874 Views

இன்றைக்கு பகலில் இருந்தே ஒரே பரபரப்பான செய்தி கோலிவுட்டில் உலா வந்துக்கொண்டிருந்தது. நகைச்சுவை நடிகர் வடிவேலு தலைமறைவாகிவிட்டார் என்பது தான் அது.

அதற்கு பின்னணியாக சொல்லப்பட்ட விஷயம், எலி படத் தயாரிப்பாளருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வடிவேலு அவரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் அதற்காக அவர் மதுரை கே புதூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து அதன் அடிப்படையில் வடிவேலுவுக்கும் அவர் தம்பிக்கும் பெயிலில் வர முடியாத கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது என்பதுதான்.

அதற்காகத்தான் வடிவேலுவும் அவர் தம்பியும் தலைமறைவாகி விட்டார்கள் என்று ஒரு செய்தி ஆஸ்திரேலிய காட்டுத்தீ போல் பரவியது.

போலீஸ் தரப்பில் விசாரித்ததன் அடிப்படையில் அப்படி எதுவும் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தகவல் இல்லை.

இன்னொரு பக்கம் வடிவேலுவிடம் விசாரித்தபோது அவரும் சிரித்துக்கொண்டே “நம்ம தலையை மறைக்க முடியுமா அண்ணே..? எங்க போனாலும் கண்டுபிடிச்சுடுவாங்களே… அதெல்லாம் சுத்த பொய். நான் மீண்டும் பரபரப்பா நடிக்க ஆரம்பிச்சிட்டதுல யார் யாருக்கு வயிறு எரியுதோ அவங்க கிளப்பிவிட்ட புகை அது..!” என்றார் கலாய்ப்பாக.

எலியை புலி ஆக்குவது தானே இயலாதவர்களின் வேலை?