October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் காமெடி பட்டாளம்
February 10, 2021

டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் காமெடி பட்டாளம்

By 0 604 Views

அயலான்’, ‘டாக்டர்’ ஆகிய படங்களை அடுத்து சிவகார்த்திகேயன் ‘டான்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது.

கல்லூரி பின்னணியில் காமெடியாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். டாக்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன், இப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பது குறிப்பிடத் தக்க விஷயம்.

அத்துடன் இயக்குநர்கள் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதும் ஹை லைட்டான விஷயம். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

சூரி முக்கிய காமெடியனாக அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், பாலசரவணன், முனிஷ்காந்த், காளி வெங்கட், ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி, விஜே விஜய் ஆகியோரும் ‘டான்’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை கணிசமாகக் கூட்டி இருக்கிறது.