October 18, 2025
  • October 18, 2025
Breaking News
April 25, 2020

திருநள்ளாறு சனி பகவான் அபிஷேக ஆராதனைகள் யூ டியூபில்…

By 0 983 Views

சனி பகவானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை யூ டியூப் மூலம் பக்தர்கள் கண்டு தரிசிக்கும் வகையில் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

“கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய இயலாத நிலையில் இருக்கும் பக்தர்களின் வசதிக்காகவும், உலகம் இந்த நெருக்கடியான காலக்கட்டத்திலிருந்து விரைவில் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்புவதற்காகவும், அனுகிரஹ மூர்த்தியான சனீஸ்வர பகவானுக்கு ஒவ்வொறு சனிக்கிழமையிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை www.thirunallarutemple.org என்ற தேவஸ்தான வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள https://www.youtube.com/channel/UCDS2fzbEm2w9GjN8QFufvlw என்ற யூ டியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

பக்தர்கள் இந்த வசதியினை பயன்படுத்தி சனீஸ்வர பகவானின் அபிஷேக ஆராதனைகளைக் கண்டு வாழ்வில் எல்லா வளமும் பெற்றிட வேண்டுகிறோம்”