March 28, 2024
  • March 28, 2024
Breaking News
April 26, 2020

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் அரசுக்கு வைத்த கோரிக்கை

By 0 557 Views

நாள்: 26.04.2020

இராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரியும்,பயிற்சி மருத்துவர்களின்,
பட்ட மேற்படிப்பு மாணவர்களின் நலன் காத்திடுக.

தமிழக அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.
இரவீந்திரநாத் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி.

சென்னை மருத்துவக் கல்லூரி பயற்சி மருத்துவர்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக விடுதியிலேயே முடக்கப் பட்டுள்ளனர்.இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதனால் ,பயிற்சி மருத்துவர்களும், அவர்களின்
பெற்றோர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

முதுநிலை மருத்துவ மாணவர்களும் அதிக அளவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இது அதிர்ச்சி அளிக்கிறது.

சென்னை இராஜிவ் காந்தி மருத்துவமனையில் ,முது நிலை மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் ,அங்கு பணிபுரியும் ,
அனைத்து பயிற்சி மருத்துவர்கள்,பட்ட மேற்படிப்பு மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனையை உடனடியாக செய்திட வேண்டும்.
முடிவுகளையும் வெளிப்படைத்தன்மையுடன் அறிவிக்க வேண்டும்.

அவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
போதுமான தரமான பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படாததும், கொரோனோ சிகிச்சை வழிமுறைகளை சரியாக கையாளததுமே இந்நிலைக்குக் காரணம்.அரசின் தவறான செயல்பாடுகள் , மருத்துவப் பணியாளர்கள் மத்தியில்
கொரோனா பரவலை அதிகரித்து வருகிறது.இது கவலை அளிக்கிறது.

# கொரோனா வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு 7 நாட்களே தனிமை படுத்திகொள்ளும் விடுப்பு
(Quarentine leave)
கொடுக்கப் படுகிறது.

கொரோனா நோயின், நோய் அரும்பு காலம் (Incubation Period) 2 முதல் 14 நாட்கள் வரை என்பதை அறிவியல் ஆய்வுகள் உறுதி செய்துள்ளது.

அவ்வாறு இருக்கும் பொழுது ஒரே வாரத்தில் அவர்களை மீண்டும் பணியில் ஈடுபடுத்துவது அறிவியலுக்கு எதிரானது.
அவர்கள் மூலம் மற்ற மருத்துவமனை பணியாளர்களுக்கும்,பிறருக்கும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படும்.இது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவாது.

எனவே, கொரோனா வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் ஏழு நாட்கள் பணி முடித்த உடன் , 14 நாட்களுக்கு, தனிமைப் படுத்தல் (Quarentine ) விடுப்பு அளிக்க வேண்டும்.

# மருத்துவர்கள் ,
மருத்துவப் பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் தடுத்திட ,தனி கண்காணிப்பு குழுவை உருவாக்க வேண்டும்.

# மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் தேவை அதிகமுள்ள நிலையில், படித்து விட்டு அரசு பணிக்காக காத்திருக்கும் ,இளம் மருத்துவர்களையும்,பணியாளர்களையும் உடனடியாக பணியில் நியமிக்க வேண்டும்.

# தமிழகம் முழுவதும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட நாட்கள் இடை வெளியில் பரிசோதனைகளை மீண்டும் ,மீண்டும் செய்திடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

# தற்காலிக செவிலியர்கள் உட்பட ,அனைத்து தற்காலிக,ஒப்பந்த,
அவுட்சோர்ஸிங் ஊழியர்களையும்,108 ஆம்புலன்ஸ் ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

# இவர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்.

# இவர்கள் கொரோனா பணியில் இறக்க நேரின்,இவர்கள் குடும்பத்திற்கும் ,
தமிழக அரசு அறிவித்துள்ள ரூ 50 லட்சம் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்.

# மருத்துவப் பணியாளர்களுக்கு,தரமான பாதுகாப்பு கவசங்களை ,தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும்.

# கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை எரிக்கவோ,அடக்கம் செய்யவோ தடை செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் வகையில் அவசரச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது வர வேற்புக் குரியது.

# சட்டம் மட்டுமே போதுமானதல்ல.
தமிழக அரசே முன்னின்று நேரடியாக இறுதி நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும்.

# மருத்துவப் பணியாளர்கள் இறந்தால் அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும்.

இவண்,
டாக்டர்
ஜி.ஆர்.
இரவீந்திரநாத்
பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான
டாக்டர்கள் சங்கம்.

9940664343
9444181955