February 16, 2025
  • February 16, 2025
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • மே 3-ம் தேதி மருத்துவமனைகள் மீது விமானங்கள் மலர் தூவும் – முப்படை தளபதி பிபின் ராவத்
May 1, 2020

மே 3-ம் தேதி மருத்துவமனைகள் மீது விமானங்கள் மலர் தூவும் – முப்படை தளபதி பிபின் ராவத்

By 0 1115 Views
இன்று மாலை முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தளபதி பதூரியா மற்றும் கடற்படை தளபதி ஆகியோர்  கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியதிலிருந்து:
 
கொரோனா தடுப்பில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் விதமாக மே 3-ம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விமானப்படை விமானங்கள் பறந்து மருத்துவமனைகள் மீது மலர் தூவும்.
 
கடற்படை சார்பில் கடலில் கப்பல்கள் அணிவகுப்பு நடத்தப்படும். கடற்படை விமானங்களும், மருத்துவமனைகள் மீது மலர் தூவும்.
 
டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர், மீடியா துறையை சேர்ந்தவர்கள், இந்த கடினமான நேரத்தில், மக்களை எப்படி காப்பது என்ற அரசின் செய்தியைக் கொண்டு சேர்த்துள்ளனர்.
 
ராணுவம் சார்பில் அணிவகுப்பு பேண்ட் வாத்திய இசைநிகழ்ச்சி நடத்தப்படும். மாவட்டங்களில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் முன்பு ராணுவம் சார்பில் இசை நிகழ்ச்சி நடத்தப்படும். போலீஸ் நினைவிடத்தில் பாதுகாப்பு படை சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும்.
 
கொரோனா பாதித்த சிவப்பு மண்டலங்களில் போலீசார் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் எந்த நடவடிக்கையும் அவர்களால் எடுக்க முடியும். அங்கு ராணுவத்தை களமிறக்குவதற்கான தேவையில்லை..!”