August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தில் ஏஆர் ரஹ்மான்
July 16, 2019

கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தில் ஏஆர் ரஹ்மான்

By 0 829 Views

‘லைகா’ நிறுவனம் தயாரிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கமல் நடிப்பது ஒருபுறமிருக்க, அவர்களுக்காக கமல் நடித்துக்கொண்டிருந்த இன்னொரு படமான ‘சபாஷ் நாயுடு’ தொடர்வதில் சிக்கல் இருந்தது.

அதைத் தொடரவே முடியாத நிலையில் அவர்களுக்காக இன்னொரு புதிய படத்தை செய்து தருவது பற்றி கமல் தெரிவிக்க, ‘லைகா’வும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். அது கமல் முன்னமே அறிவித்த ‘தலைவன் இருக்கின்றான்’ படம்தான் என்பது தகவல்.

இந்தப் படத்தை லைகாவுடன் இணைந்து கமலின் ராஜ்கமல் நிறுவனமும் தயாரிக்கவிருக்கிறது. இது ஒரு பெரிய முதலீட்டுப் படமாக இருக்கும் என்பதும் கூடுதல் தகவல்.

இந்தப் படத்துக்கான இசையமைப்பை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதற்கான தொடக்க வேலைகளில் கமலும், ஏஆர்ஆரும் இணைந்திருக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, ‘தலைவன் இருக்கிறான்’ என்று தலைப்பிலேயே அரசியல் இருக்கும் படம் அரசியல்தானே பேசப் போகிறது..? என்பது விவாதத்தின் தொடக்கமாக இருக்கிறது.