November 24, 2024
  • November 24, 2024
Breaking News
December 28, 2021

சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடம்

By 0 979 Views
நிதி ஆயோக் அமைப்பு நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் சுகாதார உட்கட்டமைப்பையும் ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் தாய் சேய் நலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
 
இதுவரை 3 கட்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 4-ம் கட்ட தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.
 

இதில் பெரிய மாநிலங்களுக்கான சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் சுகாதாரத் துறைக்கு 72.42 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான கேரளா முதல் இடத்தை பிடித்துள்ளது. கேரளாவுக்கு மொத்தம் 82.20 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. 

3-வது இடத்தில் 69.66 மதிப்பெண்களுடன் தெலுங்கானா மாநிலமும், 4-வது இடத்தில் 69.95 புள்ளிகளுடன் ஆந்திர பிரதேசமும் உள்ளது. நிதி ஆயோக் வெளியிட்டுள்ள முதல் 4 இடங்களை தென் மாநிலங்களே பெற்றுள்ளன. 5-வது இடத்தில் மகாராஷ்டிரா, 6-வது இடத்தில் குஜராத், இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் அடுத்தடுத்து டாப்-10 இடங்களில் உள்ளன.
 
இந்த சுகாதாரத் துறை பட்டியலில் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அந்த மாநிலம் வெறும் 30.57 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. 
 
அதேபோல சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் மிசோரம் முதல் இடத்தில் உள்ளது. யூனியன் பிரதேசங்களுக்கான பட்டியலில் டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன. இந்த இரண்டு மாநிலங்களிலும் மருத்துவ உட்கட்டமைப்பு வேகமாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.