August 30, 2025
  • August 30, 2025
Breaking News

Tag Archives

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சிறை பட ஃபர்ஸ்ட் லுக்

by on August 9, 2025 0

நடிகர் விக்ரம் பிரபு & LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !! செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் […]

Read More

டைப் காஸ்ட் என்ற பிரச்சனையில் சிக்கி இருக்கிறேன்..! – மனம் திறந்த விக்ரம் பிரபு

by on July 4, 2025 0

*ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘லவ் மேரேஜ்’ படக்குழு* அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் – ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி […]

Read More

லவ் மேரேஜ் திரைப்பட விமர்சனம்

by on June 27, 2025 0

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதோ என்னவோ, அந்தத் திருமணம் மண்ணில்தான் நடக்கிறது. அப்படி நடக்கக்கூடிய திருமணம் சாதி மதத்தினாலோ அல்லது ஊரார் பேச்சுக்களுக்காகவோ  சம்பிரதாயமாக நடைபெறாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுடன், இவரைத் தவற விட்டு விடக் கூடாதென்று யார் மேல் நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறதோ, அதுதான் உண்மையான காதல் என்று புரிய வைக்கும் படம். அதை ஒரு ஃபீல் குட்  படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷண்முகப்பிரியன்  பெரும்பாலும் அடிதடி ஆக்சன் படங்களிலேயே பார்த்து பழக்கப்பட்டு விட்ட […]

Read More

ரெய்டு திரைப்பட விமர்சனம்

by on November 15, 2023 0

நிஜ வாழ்க்கையில் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் பிரச்சனை இல்லாமல் வாழ முடியுமோ என்னவோ, ஆனால் சினிமாவில் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் வாழவே முடியாது என்பதுதான் நிதர்சனம். அப்படி நேர்மையான போலீஸ் ஆக விக்ரம் பிரபு வாழ்ந்து தாதாக்களை சுளுக்கு எடுக்க… பதிலுக்கு அவர்கள் அவரது மனைவி ஸ்ரீ திவ்யாவைப் போட்டுத் தள்ளி விடுகிறார்கள். வில்லன்களைப் பழிதீர்க்க விக்ரம் பிரபு ரெய்டு எடுப்பதுதான் இந்தப் படத்தின் கதை. ஒரு ஆக்சன் ஹீரோவாக பரிமளிப்பது என்பது சாதாரண வேலை இல்லை. […]

Read More

எதிர்மறைத் தன்மையை முன்வைத்து உருவாக்கப்பட்ட படம் ரெய்டு – விக்ரம் பிரபு

by on November 4, 2023 0

‘ரெய்டு’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்வில் முதலாவதாக பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது, “இயக்குநர் முத்தையா இந்தப் படத்திற்கு சிறப்பாக வசனம் எழுதியுள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி […]

Read More

நல்ல கதை இருந்தால் சின்ன பட்ஜெட் படங்களை எடுக்கலாம் – இறுகப்பற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

by on October 13, 2023 0

சின்ன பட்ஜெட்டில் அதேசமயம் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களைத் தொடர்ந்து தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த அக்-6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று மாலை நடைபெற்ற நன்றி […]

Read More

இறுகப்பற்று திரைப்பட விமர்சனம்

by on October 4, 2023 0

படத்துக்குப் படம் கத்தி, சுத்தி, துப்பாக்கி, பீரங்கி, ரத்தம் என்று சுத்திச் சுத்தி அடித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் இது போன்று எப்போதோ அபூர்வமான குடும்ப நலன் பேசக்கூடிய படங்கள் வருகின்றன – அதை முதலில் வரவேற்க வேண்டும். இதுபோன்று ஆரோக்கியமான படங்களைத் தருவதற்கென்றே உருவாக்கப்பட்டிருக்கும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோசும், அதே பொட்டன்ஷியலுடன் நல்ல படங்களை மட்டுமே எடுப்பேன் என்கிற அளவில் நேர்த்தியான கதைகளை எழுதி இயக்கிக் கொண்டிருக்கும் யுவராஜ் தயாளனும் சேர்ந்திருப்பதால் இந்தப் படத்துக்கு சற்று எதிர்பார்ப்பு […]

Read More

டாணாக்காரன் லொகேஷனை 40 நகரங்களில் தேடிய இயக்குனர்

by on April 1, 2022 0

டிஸ்னி + ஹாட்ஸ்டார், தமிழ் ஓடிடி தளத்தில் இணையற்ற திறமையுடன், அதன் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளது. துல்லியமாக சொல்வதானால், இந்த முதல் தர ஓடிடி இயங்கு தளம், தமிழ் பார்வையாளர்களுக்கு வரப்பிரசாதமாக, ‘பிளாக்பஸ்டர்’ கதைகளின் மையமாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் அற்புதமான பொழுதுபோக்குகளை வழங்கிய டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், தற்போது இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள “டாணாக்காரன்” படத்தை, திரைப்பட ஆர்வலர்களுக்காக ஏப்ரல் 8, 2022 அன்று […]

Read More

அசுரகுரு திரைப்பட விமர்சனம்

by on March 13, 2020 0

இதுவரை ஹீரோக்கள் கொள்ளைக்காரனாகிய ‘ராபின் ஹுட்’ வகைக் கதைகள் நிறைய வந்ததுண்டு. இதுவும் அப்படி ஒரு கதைதான். ஆனால், இதில் ராபின் ஹுட் போல ஹீரோ விக்ரம் பிரபு கொள்ளையடித்த பணத்தை யாருக்கும் கொடுப்பதில்லை. ஏன்..? அவரே அதிலிருந்து ஒரு சிங்கிள் டீ கூட குடிப்பதில்லை. ஏன் என்பதுதான் இந்தப்படத்தில் இயக்குநர் ராஜ் தீப் சொல்லியிருக்கும் புதுமை. படத்தின் ஆரம்பத்தில், ஓடும் ரயிலில் மேற்கூரையைத் துளையிட்டு விக்ரம்பிரபு கொள்ளையடிக்கும் காட்சி, சென்னைக்கு வந்த ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட […]

Read More

எல்லா வயதினரும் பார்க்கக் கூடிய படம் துப்பாக்கி முனை – தணிக்கைத் துறை

by on October 25, 2018 0

’60 வயது மாநிறம்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்துள்ள ‘துப்பாக்கி முனை’ படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார். ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கிய […]

Read More
  • 1
  • 2