July 6, 2025
  • July 6, 2025
Breaking News

Tag Archives

பிகில் கதை புகாரில் திடுக்கிடும் புதிய திருப்பம்

by on October 16, 2019 0

விஜய் நடிக்க, அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பிகில்’ தீபாவளிக்கு வெளிவந்துவிடும் என்று நம்பிக்கையில் விஜய் ரசிகர்கள் இருக்க, உயர்நீதி மன்றத்தில் பிகில் கதை தன்னுடையது என்று இயக்குநர் செல்வா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.   நேற்று உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த பிகில் கதை மீதான இயக்குநர் செல்வாவின் புகார் வழக்கில் இன்று (16-10-2019) பிகில் கதை தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க படத்தின் இயக்குநர் அட்லீக்கு நீதியரசர் உத்தரவிட்டார். இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகிறதோ […]

Read More

பிகில் வெளியான போலி சென்சார் சான்றிதழ் உண்மை பின்னணி

by on October 14, 2019 0

ஒரு வழியாக இன்று பிகில் படத்துக்கு தணிக்கை முடிந்தது. அதில் ‘யு’ சான்றிதழ் கிடைத்ததாக ஒரு போலி சான்றிதழ் வாட்ஸ் ஆப் குரூப்களில் பரவ ஆரம்பித்தது. ஆனால், உண்மையில் ‘யுஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறதாம். இன்னும் அது அதிகார பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் நம் காதுக்கு வந்த தகவல்கள். படம் ஓடும் மொத்த நேரம் 2 மணி 59 நிமிடங்களாம். ‘யுஏ’ சான்றிதழில் உடன்பாடு இல்லாத படக்குழுவினர் ‘யு’ கேட்டபோது வன்முறை அதிகமாக உள்ல 20 நிமிடங்களுக்கு படத்தின் […]

Read More

பிகில் பட்ஜெட்டுக்கு மேல் போனதை ஒத்துக்கொண்ட தயாரிப்பு தரப்பு

by on October 14, 2019 0

‘பிகில்’ டிரைலர் நேற்று வெளியாகி ஒன்றரை நாளில் இரண்டு கோடிக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் சுணக்கம் இருந்தாலும் நேற்றிலிருந்து டிரைலர் மீதான பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மகிழ்ச்சியடைந்திருக்கும் படத்தின் தயாரிப்பில் அங்கம் வகிக்கும் தயாரிப்பாளரின் மகளான அர்ச்சனா கல்பாத்தி ஒரு தனியார் நிறுவன சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில் “படத்தில் பெண்களின் ஆற்றல் பற்றிப்பேசுகிறோம். அதற்கு கால்பந்து விளையாட்டு ஒரு களமாக இருக்கிறது. அது மட்டும்தானா என்றால் இல்லை… வேறு சுவாரஸ்யங்களும் இருக்கின்றன. அதைப் படத்தில் […]

Read More

விஜய்க்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி

by on September 30, 2019 0

விஜய் சேதுபதி போல் ஒரு நடிகர் கிடைத்தது தமிழ் ரசிகர்கள் செய்த புண்ணியம் என்றுதான் சொல்ல வேண்டும். நடிப்புதான் முக்கியம், நட்சத்திர அந்தஸ்து முக்கியமில்லை என்று உணர்ந்தும், நடந்தும் வருபவர். செல்வாக்குள்ள ஹீரோவாக வளர்ந்தும், பல படங்களில் ஹீரோவாக நடித்தும் வரும் வேளையிலேயே ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவனுக்கு வில்லனாகி அசத்தினார். இப்போது விஜய்யின் முறை. லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘விஜய் 64’ படத்தில் விஜய்க்கு வில்லனாக இருப்பவர் விஜய் சேதுபதியேதான். விஜய் 64 படத்தில் விஜய் […]

Read More

நெட்டில் கசிந்தது பிகில் டீஸர்தானா..?

by on September 29, 2019 0

ஏற்கனவே ‘பிகில்’ படத்தின் ‘சிங்கப் பெண்ணே’, ‘வெறித்தனம்’ பாடல்கள் வெளியிடப்படும் முன்னரே நெட்டில் கசிந்துவிட, இன்று அதிக எதிர்பார்ப்பிலுள்ள ‘பிகில்’ டீஸர் கசிந்துவிட்டதாக சில டீஸர்கள் உலா வருகின்றன. முதல் விஷயம் அது படக்குழுவால் வெளியிடப்பட்ட டீஸர் போல் தெரியவில்லை. இரண்டாவதாக ஒரு டீஸருக்கும் இன்னொன்றுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதுவே சொல்லிவிடும் இரண்டுமே உண்மையில்லை என்று. அத்துடன் விஜய் ரசிகர்களுக்காக இயங்கிவரும் ட்விட்டர் பக்கங்களும் இது ரசிகர்கள் ஆர்வமிகுதியால் செய்த வேலை என்று அறிவித்திருக்கின்றனர். சரி… ஏன் […]

Read More

கறிக்கடை உரிமையாளர்களை கூல் ஆக்கிய விஜய் ரசிகர்கள்

by on September 29, 2019 0

கடந்த சில தினங்களுக்கு முன் கோவையில் பிகில் படத்துக்கு எதிராக கறிக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்த தகவலைத் தெரிவித்திருந்தோம். பிகில் போஸ்டர் புகைப்படத்தில் கறி வெட்டும் கட்டை மேல் விஜய் கால்வைத்து உட்கார்ந்திருந்த காரணத்தால் கறிக்கடை உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகில் பட போஸ்டர்களைக் கிழித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் கொதிப்படைந்திருந்த கறிக்கடை உரிமையாளர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் கோவை மாவட்ட விஜய் ரசிகர்கள் ஒரு நூதனமான பணியை மேற்கொண்டனர். அதன்படி […]

Read More

விஜய் காப்பி பேச்சு வைரல் வீடியோவுக்கு எதிர் வீடியோ

by on September 27, 2019 0

சில தினங்களுக்கு முன் நடந்த பிகில் இசை விழாவில் விஜய் பேசிய பேச்சு பட்டிமன்றப் பேச்சாளர் கவிதா ஜவஹர் பேசிய பேச்சின் அப்பட்டமான காப்பி என்று நிரூபித்து ஓரு வீடியோ வைரலானது.  கவிதா பேசிய வீடியோவையும், விஜய் பேசிய வீடியோவையும் சேர்த்துப் போட்டு கதையை மட்டும் காப்பியடிக்கிற கோலிவுட்டில் பேசறதைக் கூட அப்படியே காப்பியடிக்கிறார்கள் என்ற ரேஞ்சில் கிண்டல் செய்தார்கள் அந்த வீடியோ கீழே…   இந்நிலையில் இந்த பேச்சு ட்ரெண்டிங் ஆனது பத்தி சம்பந்தப்பட்ட பட்டிமன்றப் […]

Read More