September 18, 2026
  • September 18, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிகில் கதை புகாரில் திடுக்கிடும் புதிய திருப்பம்
October 16, 2019

பிகில் கதை புகாரில் திடுக்கிடும் புதிய திருப்பம்

By 0 1069 Views

விஜய் நடிக்க, அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பிகில்’ தீபாவளிக்கு வெளிவந்துவிடும் என்று நம்பிக்கையில் விஜய் ரசிகர்கள் இருக்க, உயர்நீதி மன்றத்தில் பிகில் கதை தன்னுடையது என்று இயக்குநர் செல்வா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.  

நேற்று உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த பிகில் கதை மீதான இயக்குநர் செல்வாவின் புகார் வழக்கில் இன்று (16-10-2019) பிகில் கதை தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க படத்தின் இயக்குநர் அட்லீக்கு நீதியரசர் உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகிறதோ என்ற பரபரப்பு உச்சத்தில் இருக்கும் நேரத்தில் புதிய திருப்பமாக இயக்குநரும், தயாரிப்பாளருமான மீரான் என்பவர் பிகில் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும், அதை 2015-ல் ‘ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா’வில் முறைப்படி பதிவு செய்துள்ளேன் எனவும் கூறி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளாராம். 

தலைவலி தீரும் நேரத்தில் திருகு வலி வந்தது போல் இருக்கிறது இந்தப் புகார். படம் வெளியாவதற்குள் இன்னும் என்னென்ன புயல்களும், பூகம்பமும் கிளம்புமோ என்று தெரியவில்லை.