March 22, 2025
  • March 22, 2025
Breaking News
October 16, 2019

அஜித் 60 படத்தலைப்பு கசிந்தது உண்மை என்ன

By 0 833 Views

கோலிவுட்டின் எதிரிகள் யார் என்றால் கோலிவுட் காரர்கள்தான். யாரை நம்பி ஒரு ரகசியம் காக்கப்படும் என்று சொல்லப்டுகிறதோ, அதை இன்னொருவரிடம் சொல்லாமல் அவர் தூங்கப் போகவே மாட்டார். 

படத்தின் பாடல்கள், டீஸர், டிரைலர் எல்லாமே இந்த வகையில்தான் அறிவிக்கபடுவதற்கு முன்பே வெளிப்படுகின்றன.

படத்தைப் பற்றி காஸிப்புகள் எனப்படும் கிசுகிசுக்களை மீடியாக்களிடம் பரப்பி விடுவதும் அந்தப் படம் சம்பந்தப்பட்ட மேனேஜர், உதவி இயக்குநர்கள், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்தான். ஆனால், அதை வெளியிடும் மீடியாக்கள் மேல் ஒட்டுமொத்த கோலிவுட்காரர்களும் பாய்வார்கள். 

அப்படி எச்.வினோத் இயக்கத்தில் ‘நேர் கொண்ட பார்வை’யை அடுத்து அஜித் நடிக்கும் ‘அஜித் 60’ படத்தைப் பற்றிய முக்கிய செய்தி ஒன்று இன்று கசிந்துள்ளது. அது படத்தின் தலைப்பு.

அது அஜித்தின் ‘வி’ சென்டிமென்ட் படியே ‘வலிமை’ என்று முடிவாகியிருக்கிறதாம்.

இந்த டைட்டில்தான் முடிவு செய்யப்பட்டது என்பது உண்மையானால் எவ்வளவு நம்பகமானவர்கள் எச்.வினோத்தின் டீமில் உள்ளவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்…

அப்படி இல்லையென்றால் நாம் இதைக் கடந்து போய் விடலாம்..!