July 2, 2025
  • July 2, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கர்ப்பம் தரித்த கீர்த்தி சுரேஷ்
October 17, 2019

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கர்ப்பம் தரித்த கீர்த்தி சுரேஷ்

By 0 868 Views

தேசிய விருது வாங்காவிட்டாலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு மேற்படி விருது கூடுதல் பொறுப்புணர்ச்சியைத் தந்திருக்கிறது எனலாம்.

அதிலும் நடிகைகள் முக்கியத்துவம் பெறும் கேரக்டர்களில் நடிக்க இப்போது ஆர்வம் காட்டிவரும் கீர்த்தி, கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பென்ச்’ மற்றும் ‘பேஷன் ஸ்டூடியோஸ்’ தயாரிக்கும் ‘பெண்குயின்’ படத்தில் முக்கிய வேடம் ஏற்கிறார்.

அதன் முதல் பார்வையை இன்று கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டதில் கீர்த்தி அதில் கர்ப்பம் தரித்து நடித்திருப்பது தெரிகிறது. இப்போதுதான் சமூகம் மெல்ல மெல்ல பெண்களின் வலியைப் புரிந்து கொண்டு வருகிறது. அதில் முக்கியமான படமாக பெண்குயின் இருக்கும் என்று தெரிகிறது.

‘ஈஸ்வர் கார்த்திக்’ எழுதி இயக்கும் படத்துக்கு சந்தோஷ் நராயணன் இசையமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். (ஓரே கார்த்திக் மயமாக இருக்கே..?) 

தமிழிலும், தெலுங்கிலும் தயாராகும் படம் வரும் 2020 கோடையில் வெளியாகிறது.

இன்றைக்கு கீர்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த முதல் பார்வை வெளியிடப் பட்டதாம். பிறந்தநாளும் அதுவுமா என்னங்க இப்படி ஒரு போஸ்டர்..?

Penguin First Look

Penguin First Look