September 15, 2026
  • September 15, 2026
Breaking News
September 29, 2019

நெட்டில் கசிந்தது பிகில் டீஸர்தானா..?

By 0 1014 Views

ஏற்கனவே ‘பிகில்’ படத்தின் ‘சிங்கப் பெண்ணே’, ‘வெறித்தனம்’ பாடல்கள் வெளியிடப்படும் முன்னரே நெட்டில் கசிந்துவிட, இன்று அதிக எதிர்பார்ப்பிலுள்ள ‘பிகில்’ டீஸர் கசிந்துவிட்டதாக சில டீஸர்கள் உலா வருகின்றன.

முதல் விஷயம் அது படக்குழுவால் வெளியிடப்பட்ட டீஸர் போல் தெரியவில்லை. இரண்டாவதாக ஒரு டீஸருக்கும் இன்னொன்றுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதுவே சொல்லிவிடும் இரண்டுமே உண்மையில்லை என்று.

அத்துடன் விஜய் ரசிகர்களுக்காக இயங்கிவரும் ட்விட்டர் பக்கங்களும் இது ரசிகர்கள் ஆர்வமிகுதியால் செய்த வேலை என்று அறிவித்திருக்கின்றனர். சரி… ஏன் இப்படிச் செய்ய வேண்டும்..?

எல்லாம் உண்மையை வரவழைக்கத்தான். ‘பிகில்’ படத்தின் இசைவிழா பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில் அடுத்து டீஸரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

அக்டோபர் முதல் வாரத்தில் டீஸர் வெளியாகிவிடுமென்று நம்பப்படுவதால் அது என்றைக்கு என்று யாராவது சொல்லமாட்டார்களா என்ற ஆர்வத்தில் இப்படிக் கிளப்பிவிட்டால் அதை நம்வேண்டாமென்று சொல்லி அதிகாரபூர்வ தகவல் வந்துவிடும் என்ற உத்திதானாம்.

கொஞ்சம் விட்டால் ரசிகர்களே முழுப்படத்தையும் காட்டிவிடுவார்கள்..!