April 26, 2024
  • April 26, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய் காப்பி பேச்சு வைரல் வீடியோவுக்கு எதிர் வீடியோ
September 27, 2019

விஜய் காப்பி பேச்சு வைரல் வீடியோவுக்கு எதிர் வீடியோ

By 0 569 Views

சில தினங்களுக்கு முன் நடந்த பிகில் இசை விழாவில் விஜய் பேசிய பேச்சு பட்டிமன்றப் பேச்சாளர் கவிதா ஜவஹர் பேசிய பேச்சின் அப்பட்டமான காப்பி என்று நிரூபித்து ஓரு வீடியோ வைரலானது. 

கவிதா பேசிய வீடியோவையும், விஜய் பேசிய வீடியோவையும் சேர்த்துப் போட்டு கதையை மட்டும் காப்பியடிக்கிற கோலிவுட்டில் பேசறதைக் கூட அப்படியே காப்பியடிக்கிறார்கள் என்ற ரேஞ்சில் கிண்டல் செய்தார்கள்

அந்த வீடியோ கீழே…
 
இந்நிலையில் இந்த பேச்சு ட்ரெண்டிங் ஆனது பத்தி சம்பந்தப்பட்ட பட்டிமன்றப் பேச்சாளர் கவிதா ஜவஹர் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியொன்றில், “ஒரு விழாவிலே நான் யதேச்சையா பேசி வைரலாகும் வீடியோவில் இரண்டு விஷயங்கள் வருது. ஒன்று திருக்குறள். அதை திருவள்ளுவர் எழுதினார். நான் எழுதவில்லை. இன்னொன்னு குட்டிக் கதை. அதுவும் என்னுடைய சொந்தக் கதை கிடையாது.
 
பல வருடங்களாகப் பல பட்டிமன்ற மேடைகளில் பலரால் மேற்கோள் காட்டப்படுகிற குட்டிக் கதைதான் அது. அந்தந்தச் சூழலுக்கு ஏற்றாற்போல் திருக்குறளையும், கதைகளையும் சொல்வோம். அப்போது தான் அது மக்களிடையே போய் சேரும். அதுமாதிரி ஆரணியில் வியாபாரிகள் அமைப்பு சார்ந்த நிகழ்ச்சி என்பதால், அந்த இடத்தில் பேசினேன்.
 
விஜய் சாரும் வேறு எங்கேயாவது இந்தக் கதையைக் கேட்டிருக்கலாம். இப்படி ஒரு சேர அமைந்தது தற்செயலான நிகழ்வு தான் என்று நம்புகிறேன்.
 
ஒரு விஷயம் தெரியுமா? நான் விஜய்-யோட தீவிரமான ரசிகை. தற்செயலாக அமைந்ததில் மகிழ்ச்சி. நான் கூட என் பேச்சில் திருக்குறளை ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போயிருப்பேன். விஜய் சார் அதை ரொம்பவே சிறப்பாகச் சொல்லிட்டார். அதற்கான விளக்கத்தைக் கூட நிறுத்தி நிதானமாக ரொம்ப அழகாகச் சொல்லியிருந்தார்.
 
இதற்கு முன்பு அவருடைய நடிப்புக்கு ரசிகையாக இருந்தேன். ‘பிகில்’ பேச்சுக்குப் பிறகு அவருடைய பேச்சுக்கும் ரசிகையாகிட்டேன்’ என்று கவிதா ஜவஹர் சொன்ன வீடியோ இப்போது வலம் வருகிறது.