கடந்த சில தினங்களுக்கு முன் கோவையில் பிகில் படத்துக்கு எதிராக கறிக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்த தகவலைத் தெரிவித்திருந்தோம்.
பிகில் போஸ்டர் புகைப்படத்தில் கறி வெட்டும் கட்டை மேல் விஜய் கால்வைத்து உட்கார்ந்திருந்த காரணத்தால் கறிக்கடை உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகில் பட போஸ்டர்களைக் கிழித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
Vijay Fans Cool Down Kovai Protesters
இந்நிலையில் கொதிப்படைந்திருந்த கறிக்கடை உரிமையாளர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் கோவை மாவட்ட விஜய் ரசிகர்கள் ஒரு நூதனமான பணியை மேற்கொண்டனர்.
அதன்படி கறிக்கடை உரிமையாளர்களுக்கு கறிவெட்டும் கட்டை மற்றும் கத்தியை வழங்கி தங்கள் சமாதனக்கொடியை பறக்கவிட, கறிக்கடை உரிமையாளர்களும் இந்த அன்பினால் ‘கூல்’ ஆனதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து பிகில் படத்துக்கு எதிரான ஒரு மனக்கசப்பு முடிவுக்கு வந்தது.
வெல்டன் விஜய் ஃபேன்ஸ்..!