ஒரு காலத்தில் நம் ஹீரோக்கள் எல்லாம் தன் பெற்றோரைக் கொன்றவர்களைப் பழி தீர்த்துக் கொண்டிருந்தார்கள். இது ஹீரோக்களின் (வயதான) சீசன் 2 என்பதால் மகன்களைக் கொன்றவர்களைப் பழி தீர்க்க அதே ஹீரோக்கள் புறப்பட்டருக்கிறார்கள். இதிலும் ரஜினி அப்படி நேர்மையாக வளர்த்த தன் பிள்ளையை அந்த நேர்மைக்காகவே பறிகொடுக்க நேர, அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து பழி தீர்க்கும் கதைதான். இந்தக் கதை எல்லாம் தேவையே இல்லை – ரஜினி ஒரு படத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு தனி பிராண்ட் […]
Read Moreநாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் உள்ளன. இதில், ராஜ்யசபா என்றழைக்கப்படும் மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 250 எம்பி-களில் 12 பேரை குடியரசுத் தலைவர் நியமிக்கும் அதிகாரம் உண்டு. இந்திய நாட்டில் “அறிவியல், விளையாட்டு, கலை, இலக்கியம்” உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை பிரதமர், அமைச்சர்கள் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் நியமிப்பார். அதன்படி, தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவும், ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷாவும் மாநிலங்கவையில் நியமன எம்.பிக்களாக இன்று ஆயினர். […]
Read Moreமுதன் முதலில் தனக்கு மன்றம் ஆரம்பித்த மதுரை AP. முத்துமணியை, ரஜினி இன்று போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் என்ற செய்தி இன்று டிரெண்ட் ஆகியிருக்கிறது. யார் இந்த முத்துமணி..? அவரைப்பற்றிய செய்தி இது… பெரும்பாலான நட்சத்திரங்களுக்குத் தமிழகத்தின் முதல் ரசிகர் மன்றத்தைத் தொடங்கிய ஊர் மதுரை. ரஜினிகாந்த்துக்கும் கூட முதல் ரசிகர் மன்றம் மதுரையில்தான் தொடங்கப்பட்டிருக்கிறது. அப்போது முத்து மணிக்கு 18 வயது. அபூர்வ ராகங்கள் படம் பார்த்துவிட்டு வந்து, தொடங்கிய ரசிகர் மன்றமாம் […]
Read Moreலைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 167வது படமான தர்பார் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கியது. தொடக்கவிழா பூஜையில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கலந்து கொண்டனர். முழுக்க மும்பையில் படமாக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் படத்தில் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஒளிப்பதிவை சந்தோஷ் சிவன் ஏற்க, இசையை அனிருத் இசைக்கிறார். படத்தின் தொடக்கவிழா வீடியோ… தொடக்க விழா கேலரி கீழே…
Read Moreநாளை உலகமெங்கும் வெளியாகவுள்ள பூமராங் படம் விவசாயத்தின் மேன்மை பற்றியும், எதிர்கால நீர்த் தேவைக்கான நதிநீர் இணைப்பின் அவசியம் பற்றியும் ஆய்வு பூர்வமாகப் பேசுகிறது. இந்த செய்திகள் பத்திரிகைகளில் பரவலான வெளியான நிலையில் நதிநீர் இணைப்பை பல்லாண்டுகளாக வலுயுறுத்தி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் கண்களுக்கும், செவிகளுக்கும் இந்த செய்தி போனது. உடனே ஆர்.கண்ணனை தன் இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டினார் ரஜினி. இந்த சந்திப்பில் நெகிழ்ந்து போயிருக்கிறார் கண்ணன். அதுபற்றிக் கேட்டபோது அவர் மனம் திறந்தார். “ரஜினி சாரிடமிருந்து […]
Read Moreசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிட ‘பேட்ட’ டிரைலர் இன்று காலை 11 மணிக்குதான் வெளியிடப்பட்டது. ஒரு நாளில் ஒரு மில்லியன் பார்வைகள் கிடைப்பதே சாதனையாக இருக்க, இந்த டிரைலர் வெளியான இரண்டே மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு நாளில் எல்லா சாதனைகளையும் மிஞ்சினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. வழக்கத்தைவிட அதிகமான துள்ளலுடன் ரஜினி நடித்திருப்பதே இந்த பேட்ட கவர்வதற்கு அதிகக் காரணமாக இருக்கிறது. அத்துடன் […]
Read Moreஇன்று தீபாவளித் திருநாளை ஒட்டி சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் வழக்கம்போல் போயஸ் கார்டனில் அவர் இல்லத்துக்கு வாழ்த்துப்பெற சென்றனர். இந்த வருடம் அவர் வீட்டில் இருந்ததால் ரசிக, ரசிகைகளை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக் கூறினார். அந்தப் புகைப்படங்கள் கீழே. அடுத்தடுத்து சொடுக்கிப் பாருங்கள்…
Read More