September 15, 2025
  • September 15, 2025
Breaking News

Tag Archives

சூர்யா வழங்கும் சில்லுக்கருப்பட்டி – சக்தி பிலிம் பேக்டரி சிறப்பு வெளியீடு

by on December 16, 2019 0

சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் கமர்ஷியல் படங்களை மட்டும் தயாரிப்பதோடல்லாமல், நல்ல திரைப்பட முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறது. தரமான நல்ல படங்களை தொடர்ந்து தயாரித்தும், சில நல்ல கருத்துள்ள படங்களை கண்டறிந்தும், அவற்றை வாங்கி வெளியிட்டும் மாறுபட்ட சினிமா அனுபவங்களுக்கு தங்களது ஆதரவை தொடர்ந்து தந்து வருகிறது. அந்த வகையில் மிக நல்ல படமாக இயக்குநர் ஹலிதா சமீம் இயக்கியுள்ள ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தின் மீதான ஈர்ப்பில் அப்படத்தின் உரிமையை பெற்றுள்ளார் 2D Entertainment நிறுவன […]

Read More

கொளஞ்சி திரைப்பட விமர்சனம்

by on July 26, 2019 0

கிராமத்தில் ஒரு பகுத்தறிவுவாதி வாழ்ந்தால் அவர் இந்த சமூகத்தில் எப்படியெல்லாம் எதிர்கொள்ளப்படுவாரோ அப்படி வாழ்ந்து வருகிறார் சமுத்திரக்கனி. மனைவி, இரண்டு மகன்கள் என்று வாழ்ந்து வருபவருக்கு ஆறாவது படிக்கும் மூத்த மகனின் முரட்டுத் தனத்தால் எப்போதும் பிரச்சினை. அவர்கள் இருவருக்குமான இடைவெளியும் அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதும்தான் கதை. ஊருக்கெல்லாம் அறிவு தரும் ஒரு வாத்தியாருக்கு முட்டாள் மகன் ஒருவன் இருந்தால் அவர் எப்படியெல்லாம் பிரச்சினைகளை எதிர்கொள்வாரோ அப்படி ஆகிறது சமுத்திரக்கனிக்கு. தான் நேர்மையாக, உண்மையானவனாக […]

Read More

சினிமாவில் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறார்கள் – பா.இரஞ்சித்

by on April 14, 2019 0

‘வர்ணாலயா சினி கிரியேசன்ஸ்’ சார்பாக ‘ராமச்சந்திரன்’, ‘பெவின்ஸ் பால்’ தயாரித்து இருக்கும் ‘பற’ படத்தை கீரா இயக்கியுள்ளார். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசப்பட்டவை…   இயக்குநர் கீரா –   “இந்தப் படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் மறைந்து விட்டார். அவ்வளவு குறைவாகத்தான் வாழ்நாள் இருக்கிறது. வாழும்போது துரோகமும் வன்மும் இல்லாமல் வாழ வேண்டும். இந்த ‘பற’ படத்தில் அண்ணன் சமுத்திரக்கனி ஏற்று நடித்திருக்கும் […]

Read More

எஸ் எஸ் ராஜமௌலியின் மெகா படத்துக்கு தலைப்பு வைக்க ரெடியா..?

by on March 14, 2019 0

இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’   300 கோடி ரூபாய பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.   அல்லூரி சீதாராமாக நடிகர் ராம் சரணும், கோமரம் பீம்மாக நடிகர் ஜுனியர் என்.டி.ஆரும் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் முக்கிய […]

Read More

நான்கு காதல் கதைகளின் தொகுப்பு சில்லு கருப்பட்டி

by on February 21, 2019 0

சில்லு கருப்பட்டி படத்தின் “அகம் தானாய் அறிகிறதே, அறிமுகம் இனி எதற்கு” என்ற அழகான பாடல் வரிகள் மற்றும் மூலம் நமது இதயங்களை கொள்ளை கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த சில்லு கருப்பட்டி சிங்கிள் தெய்வீகமான காதலின் ஆழத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறது. இந்த அன்பின் மழையில் அனைவரும் நிச்சயம் நனைவார்கள்.    பாடலுக்கு கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பை பற்றி இயக்குனர் ஹலிதா ஷமீம் கூறும்போது, “காதல் என்பது ஒரு வித்தியாசமான உணர்வைக் கொண்டது, நாம் முன்னர் […]

Read More

விஜய் சேதுபதி ஒரு மகா நடிகன் – பேட்ட விழாவில் ரஜினி

by on December 9, 2018 0

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. படத்தில் ரஜினியுடன் நடித்த சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, படத்தின் இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கலந்துகொண்ட விழாவில் ரஜினி பேசியதிலிருந்து… “கஜா புயலால் உயிரிழந்து, வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் தருணம் இது. கஜா புயல் மிகப்பெரிய பேரழிவு அரசாங்கத்தால் […]

Read More

ஆண் தேவதை சினிமா விமர்சனம்

by on October 11, 2018 0

ஆணும் பெண்ணும் அருகருகே வாழ்ந்தாலும் இருவருக்குமான புரிந்து கொள்ளலின் தூரம் பூமிக்கும், செவ்வாய்க்குமோ அல்லது இன்னும் அதிகமாகவோ இருக்கலாம் என்பதுதான் புவி வாழ் மக்களின் பொது நீதி. அப்படி வாழப்பெற்ற ஒரு ஜோடியில் குடும்பத்துக்காக வாழும் ஒரு அற்புத ஆணைப் பற்றிச் சொல்கிறார் இயக்குநர் தாமிரா. உலகத்தில் இப்படி நிறைய ஆண்தேவதைகள் இன்றைக்கும் வெளியே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களைப் பற்றி அவர்களே வெளியில் சொல்ல வெட்கப்படும் சமுதாயச் சூழலில் அதை இலக்கியமாக்கிப் பெருமைப்படுத்தியதற்காக ஆண்களின் சார்பாக […]

Read More