March 15, 2025
  • March 15, 2025
Breaking News

Tag Archives

சர்ச்சையாகும் பப்ளிக் படத்தின் ‘உருட்டு உருட்டு’ பாடல்

by on March 6, 2023 0

கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.டி.இமான் இசையமைக்க ராஜேஷ், வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் முன்பே வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் “உருட்டு” “உருட்டு” பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் பாஸ்ட் லுக் போஸ்டரில் சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன்,அயோத்திதாச பண்டிதர், பாரதிதாசன், பட்டுகோட்டை அழகிரி, ஜீவா, ராமமூர்த்தி, காயிதேமில்லத் போன்ற பல்வேறு தலைவர்களின் படங்களை […]

Read More

தலைக்கூத்தல் திரைப்பட விமர்சனம்

by on January 31, 2023 0

தமிழ்நாட்டில் விருதுநகர் பகுதிகளில் நடந்த… நடக்கிற (?) கொடூரமான ஒரு நிகழ்வுதான் இந்த தலைக்கூத்தல்.  வயோதிகத்தால் படுத்த படுக்கையாகிவிடும் முதியோரை பார்த்துக்கொள்ள வழி இல்லாமல் அதிகமான இளநீரை குடிக்க கொடுத்து எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிர்ந்த நீரால் ஊற்றி விட ஜன்னி வந்து அவர்கள் மரிப்பார்கள்.  கிட்டத்தட்ட பெண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லும் முறையை போன்றது தான் இந்த முதியோருக்கு தலைக்கூத்தல் நிகழ்வும். அப்படி ஒரு நிகழ்வை வாழ்க்கையும் வேதனையுமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ் […]

Read More

சமுத்திரக்கனியின் மகனும் நடிகர் இயக்குநர் ஆனார்

by on January 3, 2022 0

பிரபல நடிகரும் இயக்கனருமான சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன் “அறியா திசைகள்” எனும் 40 நிமிட குறும்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார். வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரி விக்னேஷ்வரன். இளைஞனாக நடிகர் – இயக்குனருமான சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன் நடித்து இந்த குறும்படத்தை எழுதி இயக்கி உள்ளார். மிகவும் புத்திசாலித்தனமான கதை களத்தில் நறுக்கிய வசனத்துடன் கூடிய இந்தப் […]

Read More

ரைட்டர் திரைப்பட விமர்சனம்

by on December 25, 2021 0

போலீஸ் கதைகளில் இதுவரை நல்ல போலீஸ், தீய போலீஸ் என்று இரண்டு வகை போலீஸைத்தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் போலீஸ் எப்படி இயங்குகிறார்கள் என்று சொன்ன படங்கள் குறைவு. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தொடாத இரண்டு போலீஸ் விஷயங்களை முன்னிறுத்தி இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப். அவை பல காலமாக கேட்கப்பட்டு வரும் போலீஸ் சங்க விவகாரம் ஒன்று. இன்னொன்று நெருக்கடிக்குள்ளாக்கப்படும் காவலர்களின் தற்கொலை. இதற்காகவே பிராங்க்ளினைப் பாராட்டலாம். திருவெறும்பூர் காவல் […]

Read More

நான் தயாரிக்கும் படம் தவறான அரசியல் பேசக் கூடாது – பா.இரஞ்சித்

by on December 20, 2021 0

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக  பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் .இந்த படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது . இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது .நிகழ்ச்சியில் இயக்குனர் பிராங்ளின்,  சமுத்திரகனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி, ஹரி, பாபு, சுப்பிரமணியம் சிவா, கவிதாபாரதி, ஜி எம் சுந்தர். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் பிரதிப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பா .ரஞ்சித் […]

Read More

காவல் நிலைய ரைட்டர்களின் வலியை பதிவுசெய்யும் ரைட்டர்

by on December 17, 2021 0

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து தரமான படங்களை தந்து வருகிறார். தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினை தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்க இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது.  பலரையும் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்துள்ளது. காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் […]

Read More

பா இரஞ்சித் தயாரிப்பில் வெளியாகும் ரைட்டர் என்ன சொல்லப் போகிறது?

by on December 12, 2021 0

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பு என்றாலே தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ்ச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்புகளாகவே இருக்கும் என்கிற எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வெளியாகி இருக்கிறது ‘ரைட்டர்’ திரைப்படத்தின் டீசர். சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் இப்படத்தை இயக்கி இருப்பவர் பிராங்க்ளின் ஜேக்கப். இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். சமூகத்தின் எல்லா மட்டத்தினரிடமும் கட்டற்ற அதிகார பலத்துடன் விளங்கும் காவல்துறையின் உள்ளே இருக்கிற அதிகார கட்டுமானத்தின் அடுக்குகளையும், அதன் சொல்லப்படாத பக்கங்களையும் விவரிக்கும் […]

Read More

சமுத்திரக்கனி தமிழ் சினிமாவின் பொக்கிஷம் -சித்திரை செவ்வானம் சிதறல்கள்

by on December 1, 2021 0

வித்தியாசமான வெற்றிப்படங்களை வழங்கி வரும் முன்னணி OTT தளமான ஜீ5யின் அடுத்த வெளியீடாக சமுத்திரக்கனி நடிப்பில்,  இயக்குனர் விஜய் எழுத்தில் , ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில்  ‘சித்திரைச் செவ்வானம் ’ டிசம்பர் 3ல் வெளியாகிறது. இப்படத்தின் முன் திரையிடல் பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இந் நிகழ்வில்… தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் பேசியதாவது… “மாஸ்டர் செல்வா இயக்குநராக வேண்டுமென்கிற ஆசையை, பல வருடங்களாக மனதில் வைத்து, சரியான படத்திற்கு காத்திருந்து, இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். தம்பி விஜய் இப்படத்திற்கு கதை […]

Read More

ஒரு தந்தையின் அழுகுரலைப் பாடியிருக்கிறேன் – எஸ். ஏ.சி உருக்கம்

by on November 21, 2021 0

இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  இவ்விழாவில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார். விழாவில் படத்தின் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் மகேஷ் கே தேவ், படத்தொகுப்பாளர் பிரபாகர், நடிகர்கள் ‘பருத்திவீரன்’ சரவணன், சமுத்திரகனி, நடிகைகள் சாக்ஷி அகர்வால், இனியா, குழந்தை நட்சத்திரம் டயானாஸ்ரீ , தயாரிப்பாளர் பி. டி […]

Read More