November 22, 2024
  • November 22, 2024
Breaking News

Tag Archives

ஓடிடி நிறுவனங்கள் மீது கடுப்பான முன்னணி இயக்குனர்

by on January 5, 2022 0

தமிழின் முன்னணி இயக்குனரான சீனு ராமசாமி ஓடிடி நிறுவனங்கள் மீது கடுப்பாகி ஒரு குற்றச்சாட்டை அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் முன் வைத்துள்ளார். அது வருமாறு… “சொன்ன தேதியை விட திரைப்படத்தை சற்றுத் தள்ளி வெளியிட்டால் தந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன சில ஓடிடி நிறுவனங்கள். கண்டெண்ட் பேஸ்டு படங்களின் தயாரிப்பாளர்கள் வளர்ந்தால் தானே ஓடிடி நிறுவனங்களுக்கு பெருமை, கதை படங்கள் வளரும். புதியவர்கள் தழைப்பர்..?”  அவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் மாமனிதன் வெளியீட்டுக்கு […]

Read More

காக்டெய்ல் படத்தில் என் ரசிகர்களை ஏமாற்றி விட்டார்கள் – யோகிபாபு வேதனை

by on July 10, 2020 0

இயக்குநர் விஜய முருகன் டைரக்‌ஷனில் யோகி பாபு , ராஷ்மிகா கோபிநாத் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் காக்டெய்ல். இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான பிஜி முத்தையா தயாரித்திருக்கிறார். படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனதில் இருந்தே படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. தமிழ்க் கடவுளான முருகனின் தோற்றத்தில் யோகி பாபு இருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருந்தார்கள். தற்போது காக்டெய்ல் திரைப்படம் ஜீ5 […]

Read More

ஹீரோயின் படங்களுக்கு ஓ டி டி யில் மவுசு – அடுத்த வெளியீடு டேனி

by on June 29, 2020 0

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் டேனி திரைப்படம். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு ‘மக்கள் செல்வி’ என்னும் பட்டப்பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது . நேரடியாக ஓடிடியில் ஆகஸ்ட் 1ல் வெளியாவதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது. இதன் ஒளிபரப்பு உரிமையை ஜீ 5 நிறுவனம் வாங்கியிருக்கிறது. இந்த திரைப்படத்தை சந்தான மூர்த்தி இயக்கியிருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் உடன் சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார். ஆன்லைனில் […]

Read More

தயாரிப்பாளர் சிவி குமார் புதிய ஓடிடி தளம் தொடங்குகிறார்

by on June 28, 2020 0

தமிழ் சினிமாவில் புது ரத்தம் பாய்ச்சும் விதமாக  அட்டகத்தி, பிட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் “தியேட்டர் TO ஹோம்” என்ற புதிய தொழில்நுட்பத்தை ‘ ரீகல் டாக்கீஸ்’ என்ற பெயரில்  விரைவில் துவங்குகிறது. வீட்டிலிருந்து வசதியாக தாங்கள் நினைத்த, நினைக்கும் படங்களை நினைக்கும் நேரத்தில் பார்க்கும்டியாக படத்திற்க்கு ஒரு முறை பார்க்க கட்டணம் என்ற விதிமுறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த தளம். நேரடி திரைப்படங்கள், ஒரிஜினல் […]

Read More

யோகிபாபுவின் காக்டெய்ல் ஓடிடி ரிலீஸ்… தப்பித்தார் முருகப் பெருமான்

by on June 27, 2020 0

இயக்குநர் விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் படத்திற்கு காக்டெய்ல் என்று பெயர் வைத்ததுடன் நில்லாமல் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் வேலுடன் கடவுள் முருகன் கெட்டப்பில் யோகி பாபு போஸ் கொடுத்தார். அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே இப்படக் குழு எதிர்பார்த்த அளவு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே சமயம் தமிழ்க்கடவுள் முருகன் கெட்டப்பில் உள்ள யோகிபாபு- தோற்றத்துக்கு டீம் விளக்கம் கொடுத்தாலும், படத்திற்கு காக்டெய்ல் என மதுவின் பெயரை வைத்திருப்பதும் சர்ச்சையைக் கிளப்பி […]

Read More

மணிரத்னம் தலைமையில் கௌதம் மேனன் கார்த்திக் நரேன் அரவிந்தசாமி கைகோர்க்கும் ஓடிடி வெப் சீரிஸ்

by on June 5, 2020 0

சின்னத்திரையான ஓடிடி-யில் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். அமேசான் சார்பில்ல் வெப் சீரிஸாக வெளியாகவுள்ள இதன் பணிகள், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. மணிரத்னம் இன்சார்ஜில் கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி மற்றும் கார்த்திக் நரேன் என 5 இயக்குநர்கள் உறுதியாகியுள்ளது. மீதமுள்ள 4 இயக்குநர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும். இதில் […]

Read More

நட்சத்திரங்கள் சம்பளத்தை குறைக்க மணிரத்தினம் ஆலோசனை

by on May 30, 2020 0

கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தமிழ்த் திரையுலகம் எப்படி பயணிக்கும் என்பதை தென்னிந்திய சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரீஸ் (SICCI) வெப்பினார் (Webinar)கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. இதில் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு திரையுலகம் இனிமேல் எப்படி பயணிக்க வாய்ப்புள்ளது தொடர்பாக தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இதில் இயக்குநர் மணிரத்னம் பேசும்போது, “திரைப்பட விநியோகம் மற்றும் திரையிடல் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இனி தயாரிப்புச் செலவுகளைக் குறைக்க வேண்டும். துறை தொடர்ந்து இயங்குவதை […]

Read More

நாங்கள் திரையரங்குகளை புறக்கணிக்கவில்லை – தெளிவுபடுத்தும் சூர்யா

by on May 27, 2020 0

‘பொன்மகள் வந்தாள் ‘ படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடுவது ஏன் என்பது குறித்து சூர்யா அளித்திருக்கும் ஜூம் பேட்டியில், “தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளை பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. எனவே மாற்று வழியை நோக்கி நகர்வது மிகவும் அவசியமானதாகும். குறிப்பாக மாற்று சினிமாக்களுக்கு ஓடிடி நல்ல தளமாக உள்ளது. இதனால் நாங்கள் திரையரங்குகளை புறக்கணிக்கிறோம் என்று அர்த்தமல்ல. திரையரங்குகளில் கிடைக்கும் ஆரவாரத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் ஈடே கிடையாது. அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் தள்ளி […]

Read More

ஓ டி டி ஒளிபரப்பில் சாதனை புரிந்த தனுஷின் பட்டாஸ்

by on May 8, 2020 0

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து பொங்கலுக்கு வெளியான பட்டாஸ் திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் சாதனையை நிகழ்த்தியது. கடந்த மே மாதம் முதல் தேதி பல மொழிகளிலும் முதல் முறையாக தொலைக்காட்சி ஓ.டி.டி. முறையில் ஒளிபரப்பான் பட்டாஸ் திரைப்படம் மாபெரும் சாதனை செய்திருக்கிறது. 13149 000 என்ற எண்ணிக்கையைத் தொட்டு, தனுஷ் நடித்த படங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்த்த படம் என்ற சாதனையையும் பட்டாஸ் நிகழ்த்தியிருக்கிறது. குடும்பம் முழுமைக்குமான தரமான பொழுதுபோக்குப் படங்களை சத்யஜோதி […]

Read More

திரை அரங்கிலிருந்து வீட்டுக்குள் திரைப்படம் – தங்கர் பச்சான்

by on April 30, 2020 0

அனைத்து தேவைகளையும் மனிதன் சுருக்கிக்கொள்ளலாம். உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு, இருக்க இடம், அணிய உடை தவிர்த்து பொழுதுபோக்கு இல்லாமல் போனால் பித்துதான் பிடித்துப்போவான். ஊரடங்குக் காலங்களில் இந்த 780 கோடி மக்களில் பெரும்பாலானோருக்குத் துணையாக இருந்தது திரைப்படங்கள்தான். திரைப்படங்களை மய்யமாகக் கொண்டே இயங்கும் தொலைகாட்சி, நாளிதழ், வார இதழ், இணையத்தள ஊடகங்கள் அனைத்தும் எப்பொழுதும் இல்லாத அளவில் சுறுசுறுப்போடு இயங்குகின்றன. தனது மொழிகளில் உள்ள திரைப்படங்களைத்தவிர பிறமொழிப்படங்களைக் கண்டிராத மக்களெல்லாம் உறங்கும் நேரம் தவிர இவைகளை […]

Read More
  • 1
  • 2