March 1, 2026
  • March 1, 2026
Breaking News

Tag Archives

நயன்தாராவின் கனெக்ட் படத்தில் ஆன்லைனில் பேயோட்டும் அதிசய சாமியார்

by on December 8, 2022 0

நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் ‘கனெக்ட் ‘ படத்தை விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மாயா, கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சத்யராஜ், இந்தி நடிகர் அனுபம்கெர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் குறித்து பேசினார் இயக்குநர் அஸ்வின் சரவணன்… “இதுவும் ஆவி சம்பந்தப்பட்ட கதைதான். ஆனால் வழக்கமான ஆவி கதைகளில் இருந்து இந்தப்படம் மாறுபட்டது.கொரோனா ஊரடங்குக் காலத்தில் எல்லோரும் தனித்தனியாக வீட்டுக்குள் இருந்த காலகட்டத்தில் நடப்பது […]

Read More

நான்கு மாதத்தில் குழந்தை பெற்ற நயன்தாரா விக்னேஷ் ஜோடி – பின்னணி தகவல்

by on October 9, 2022 0

சினிமாவில் மட்டும்தான் திருப்பங்கள் நேரும் என்பது இல்லை. சினிமாக்காரர்கள் வாழ்விலும் ஏகப்பட்ட அதிசயங்களும் திருப்பங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் சமீபத்திய அதிசயம் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி குழந்தை பெற்றிருப்பது. கடந்த ஜூன் மாதம்தான் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு திருமணம் ஆனது. இந்நிலையில் 4 மாதங்களே ஆகியிருக்க தங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக அதுவும் – இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதைப் பார்த்த […]

Read More

ஓ2 திரைப்பட விமர்சனம்

by on June 17, 2022 0

ஓ2 என்றால் ஆக்சிஜன்தானே தவிர படத்தை நினைத்தபடி எல்லாம் ஓட்டுவதற்காக அல்ல. ஆனால், கதைக்குள் ஒரு ஓட்டம் நின்றுபோக அடுத்து என்ன என்பதுதான் விஷயமே. அத்துடன் நயன்தாரா கதையின் நாயகி ஆகிவிட இந்தப் படத்துக்கு பிராண்ட் வேல்யூவும் சிறப்பு எதிர்பார்ப்பும் தொற்றிக் கொண்டிருக்கிறது. அதுவும் திருமணத்துக்குப் பிறகு வெளியாகியிருக்கும் அவரது படம் என்பதால் இன்னும் மெருகேற்றிக் கொள்கிறது அந்த எதிர்பார்ப்பு. கணவனை இழந்த நிலையில் தன் ஐந்து வயது சிறுவனுடன் வாழ்க்கை நடத்தி வரும் நயன்தாராவுக்கு அது […]

Read More

திருமணம் முடிந்து திருப்பதி தரிசனம் முடித்த நயன்தாரா விக்னேஷ் சிவன் – வீடியோக்கள்

by on June 10, 2022 0
https://slategrey-eland-326968.hostingersite.com/wp-content/uploads/2022/06/VID-20220610-WA0057-1.mp4 https://slategrey-eland-326968.hostingersite.com/wp-content/uploads/2022/06/VID-20220610-WA0044.mp4 Read More

இணையத்தை கலக்கி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் டிரெய்லர்

by on April 23, 2022 0

தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா இணைந்து நடிக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் நேற்று வெளியானது. 2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா என தென்னிந்திய […]

Read More

ரஜினி வழியில் அண்ணாத்தே படப்பிடிப்புக்கு சென்ற நயன்தாரா

by on April 27, 2021 0

ரஜினி நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு இப்போது ஐதராபாத்தில் நடந்து வருவது தெரியும்தானே..? இதில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் தனி விமானத்தில் அங்கு சென்றார் இல்லையா…    இதன் அடுத்தகட்ட  படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக, நடிகை நயன்தாராவும் தனி விமானத்தில் ஐதராபாத் சென்றுள்ளார். அவர் ஐதராபாத் விமான நிலையத்தில் நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர்களில் சூப்பர்ஸ்டாருக்கு அந்த வசதி என்றால் நடிகைகளில் சூப்பர் ஸ்டாருக்கும் அதே வசதி வேண்டும் தானே..?

Read More

நயன்தாரா விக்னேஷ் சிவன் கொச்சி பயணம் புகைப்படங்கள்

by on April 10, 2021 0

வருடத்திறகு இரண்டு முறையாவது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஊர் மற்றும் உலகம் சுற்றி வரும் படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி விடுகின்றன. இந்த வருட வீடியோவாக தங்களது இருக்கமான வேலைகளுக்கு இடையே ஒரு விடுமுறையாக விஷூ பண்டிகைக்காக நயன்தாராவின் சொந்த ஊரான கொச்சி புறப்பட்டுச் சென்றார்கள். வழக்கம்போல தனி விமானத்தில்தான் அவர்களது பயணம் அமைந்தது. இங்கே கிளம்பியதிலிருந்து அங்கே சென்று சேரும் வரை வழியெல்லாம் பார்ப்பவர்கள் புகைப்படம் எடுத்து தள்ளிவிட்டார்கள். அவற்றில் சில கீழே…  

Read More

நயன்தாரா விக்னேஷ் சிவன் படத்துக்கு கிடைத்த சர்வதேச விருது

by on February 8, 2021 0

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூழாங்கல். யுவன் ஷங்கர் ராஜா இசைமைத்துள்ள இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படம் ரோட்டர்டாம் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று மிக உயரிய விருதான டைகர் விருதை வென்று இருக்கிறது. ‘கூழாங்கல்’ படத்துக்கு டைகர் விருது கிடைத்தது குறித்து விக்னேஷ் சிவன், ” டைகர் விருதைப் பெறும் முதல் தமிழ்ப் படம் ‘கூழாங்கல்’. வினோத்தின் கடின உழைப்பு அவரது முதல் […]

Read More