July 13, 2025
  • July 13, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நயன்தாரா விக்னேஷ் சிவன் படத்துக்கு கிடைத்த சர்வதேச விருது
February 8, 2021

நயன்தாரா விக்னேஷ் சிவன் படத்துக்கு கிடைத்த சர்வதேச விருது

By 0 551 Views

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூழாங்கல். யுவன் ஷங்கர் ராஜா இசைமைத்துள்ள இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படம் ரோட்டர்டாம் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று மிக உயரிய விருதான டைகர் விருதை வென்று இருக்கிறது.

‘கூழாங்கல்’ படத்துக்கு டைகர் விருது கிடைத்தது குறித்து விக்னேஷ் சிவன், ” டைகர் விருதைப் பெறும் முதல் தமிழ்ப் படம் ‘கூழாங்கல்’. வினோத்தின் கடின உழைப்பு அவரது முதல் படத்திலெயே ஒரு மிகப்பெரிய கவுரவத்தை பெற்றுத் தந்துள்ளது.

ரவுடி பிக்சர்ஸின் முதல் படம் இது. எனவே நாங்களும் அளப்பரிய மகிழ்ச்சியில் இருக்கிறோம். மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கிறோம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. வினோத் மற்றும் குழுவினருக்கும் நன்றி..! “