“கொள்கை முடிவுகளின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூடியதாகவும், , ஆலையை மூடும் முழு உரிமையும் மாநில அரசுக்கு உள்ளது..!” என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அத்துடன் ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றங்களுக்குச் சென்றாலும் இனி மீண்டும் அந்த ஆலையைத் தமிழ்நாட்டில் திறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் கருத்துக்கு பதில் அளிக்கையில்… “கொள்கை முடிவுகளின் அடிப்படியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாற்ற முடியாது […]
Read Moreதூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது… “தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு – இதுவரை தமிழகத்திலோ, இந்தியாவிலோ கேட்டும் அறிந்தும் இல்லாத ஒரு நிகழ்வு. மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை மத்திய, மாநில அரசுகள் ஒடுக்கத் துடிப்பதை இதற்கு முன் நாம் கண்கூடாகக் கண்டிருந்தாலும், தூத்துக்குடியில் நடைபெற்றதைப் போல காவல்துறை மனித உயிர்களை அதிக எண்ணிக்கையில் காவு வாங்கிய ஒரு […]
Read Moreதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் பேசுகையில், அரசு தரப்பில் யாரும் தூத்துக்குடி மக்களைச் சந்திக்காத்தைக் குற்றம் சாட்டினார். மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி இடமாற்றம் செய்யப்பட்டது குறித்துக் கேள்வி எழுந்தபோது, “இந்தப் பதவிநீக்கம் போதாது, மேலே இருக்கும் […]
Read Moreஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் விவசாய சங்கங்களின் சார்பில் வரும் 19 ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (13.05.2018) விவசாய சங்சங்களின் பிரதிநிதிகள் சிலர் தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து காவிரி நதிநீர் பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். […]
Read Moreதூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராக 49-வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மக்களின் பிரதிநியாக நானும் பங்கேற்பேன் என்று அறிவித்திருந்த மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் இன்று போராட்டத்தில் பங்கேற்றார். அங்கு கமல் பேசியதிலிருந்து… “எனக்கென்று ஒரு கட்சி இருந்தாலும் தனி மனிதனாக இங்கு வந்துள்ளேன். எனது பெயர் கமல்ஹாசன். நடிகன் என்பதை விட நான் மனிதன் – நான் தமிழன். உங்களுககு நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த அநீதி வியாபாரப் பேராசையின் […]
Read More