November 22, 2024
  • November 22, 2024
Breaking News

Tag Archives

கொரோனா தடுப்பு வாலண்டியராக சாலையில் இறங்கிய சசிகுமார் வீடியோ

by on April 19, 2020 0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களை வீட்டினுள் இருக்கும்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் சிலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் காவல்துறைக்கு இடையூறு தரும் வகையில் ரோடுகளில் சுற்றி திரிகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான சசிகுமார் அவர்கள் இன்று கொரோனா தடுப்புக்காக மதுரை காவல்துறையுடன் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றியுள்ளார். ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் திரியும் மக்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். “நாம் நலமாக இருக்க இவர்கள் […]

Read More

கொரோனா பணக்காரர்கள் நோயா? – முதல்வர் பேச்சுக்கு கஸ்தூரி கமெண்ட்

by on April 18, 2020 0

சமீபத்திய முதல்வரின் பேச்சுக்கு நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரியின் கமெண்ட் –  “தமிழக முதலமைச்சர் EPS அவர்களின் சமீபத்திய பேச்சு பொதுமக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் உள்ளது என்பது நல்ல விஷயம். ஆனால், அதற்காக சரியான சில விவரங்களை மறைப்பதும் தவறான தகவல்களை அறிவிப்பதும் ஆபத்து. இன்னும் மூன்றே நாட்களில் கொரோனா இறப்புக்கள் நின்றுவிடும் என்பது பாசிட்டிவ் பேச்சு என்றால் ஓகே; ஆனால் அது நடக்காமல், மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் நிலை வந்தால் ? கொரோனா பணக்காரர்கள் […]

Read More

ஒரே நாளில் அமெரிக்காவில் அதிகபட்சமாக 2600 கொரோனா பலி

by on April 16, 2020 0

உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கும் உயிர்கொல்லி தொற்றான ‘கொரோனா வைரஸ்’ தாக்கத்தால் இதுவரை 20 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 5 லட்சத்து 10 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 6 லட்சத்து 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 28,529 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்லும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து […]

Read More

இந்திய கொரோனா ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் – தமிழகம் முதலிடம்

by on April 16, 2020 0

இந்தியா முழுவதும் கொரோனா ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் அறிவிப்பு; தமிழகத்தில் 22 மாவட்டங்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 22 மாநிலங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம்பிடித்துள்ளன. நாடு முழுவதும் 170 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 207 மாவட்டங்கள் வெள்ளை மண்டலமாகவும், 353 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் […]

Read More

கால் சென்டரில் சேர்ந்து கொரோனா சேவை செய்யும் முன்னணி நடிகை

by on April 14, 2020 0

கொரோனா அச்சத்தால் முடங்கி போயிருக்கும் நடிகை, நடிகர்கள் வெட்டியாகப் பொழுதை போக்கி அதை வீடியோவாக எடுத்து ஷேர் செய்து வரும் சூழலில் நமக்கெல்லாம் அறிமுகமான ஒரு நடிகை செய்திருக்கும் காரியம் பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது. அவர் சசிகுமார் நடித்த ‘வெற்றிவேல்’ என்னும் படம் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை நிகிலா விமல். பிறகு அதே சசிகுமாருடன் ‘கிடாரி’ படத்தில் நடிச்சிருந்தவர் மேலும் சில படங்களில் கமிட் ஆகி இருக்கிரார். இதற்கிடையில் உலகம் முழுவதும் கொரோனா நோய் […]

Read More

உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம் – முக ஸ்டாலின் கடிதம்

by on April 12, 2020 0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சற்றுமுன்னர் தனியார் தொண்டு நிறுவனங்கள் உணவுப்பொருட்களை தாங்களாகவே விநியோகம் செய்ய கூடாது என்றும், மாவட்ட நிர்வாகம் மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். […]

Read More

அஜித் பாணியிலேயே உதவிய அஜித் பட நாயகி

by on April 11, 2020 0

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ’கோடிட்ட இடங்களை நிரப்புக’, ‘என் கிட்ட மோதாதே’ உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்த பார்வதி நாயர் அஜித் பாணியிலேயே அனைத்து தரப்பினருக்கும் உதவியிருக்கிறார். பெப்ஸி அமைப்புக்கு 1500 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கியதோடு, பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சமும் நன்கொடை வழங்கியிருக்கிறார்.     அத்துடன் சம்பளம் இல்லாமல் அவதியுறும் சினிமா பத்திரிகையாளர்களின் […]

Read More

கொரோனாவை விரைவாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் வரவில்லை

by on April 11, 2020 0

கொரோனாவை விரைவாக கண்டறிவதற்காக பத்து லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்தியா வாங்குவதாக முடிவெடுத்தது. இந்தக் கருவிகள் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா சோதனை முடிவுகளைக் கண்டறிய முடியும்,. இதில் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு லட்சம் கருவிகள் வருவதாக இருந்தது. திட்டப்பட்டி நேற்று இந்த கருவிகள் தமிழகம் வந்திருக்க வேண்டும். ஆனால், வரவில்லை. இது குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:- “ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் இந்தியாவிற்கே வரவில்லை. கருவிகள் […]

Read More

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க நாளை அமைச்சரவை கூட்டம்

by on April 10, 2020 0

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 19 மருத்துவர்கள் குழுவுடன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வர்களும் […]

Read More

நட்சத்திர ஓட்டலை மருத்துவப் பணியாளர்கள் தங்க இலவசமாகக் கொடுத்த பாலிவுட் நடிகர்

by on April 10, 2020 0

அருந்ததி, சந்திரமுகி, ஒஸ்தி போன்ற பல படங்களில் வில்லனாக நடித்தவர் பிரபல இந்தி நடிகர் சோனு சுத். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் பல விருதுகளை பெற்றவர் இவர். சமீபத்தில் டெல்லியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். இந்த துயர சம்பவத்தை அடுத்து சோனு சுத் தனது ஸ்டார் ஹோட்டலை கொரோனாவுக்காக திறந்து விட்டுள்ளார். மருத்துவர்கள் செவிலியர்கள் நேரம் காலம் பார்க்காமல் கொரோனாவுக்கு எதிராக உழைத்து வருகின்றார். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை […]

Read More