April 19, 2024
  • April 19, 2024
Breaking News
April 16, 2020

இந்திய கொரோனா ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் – தமிழகம் முதலிடம்

By 0 519 Views

இந்தியா முழுவதும் கொரோனா ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் அறிவிப்பு; தமிழகத்தில் 22 மாவட்டங்கள்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 22 மாநிலங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம்பிடித்துள்ளன.

நாடு முழுவதும் 170 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 207 மாவட்டங்கள் வெள்ளை மண்டலமாகவும், 353 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம் பெற்றுள்ளன. மஹா.,வில் 14, உ.பி.,யில் 13, ராஜஸ்தானில் 12, ஆந்திராவில் 11, டில்லியில் 10 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, கோவை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், சேலம், ஈரோடு, வேலூர், திருப்பூர், தேனி நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, விருதுநகர், கரூர், திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி, நாகை, திருவாரூர், விழுப்புரம் ஆகிய 22 மாவட்டங்களை சிவப்பு மண்டலங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்கள், தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்.