December 12, 2024
  • December 12, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கால் சென்டரில் சேர்ந்து கொரோனா சேவை செய்யும் முன்னணி நடிகை
April 14, 2020

கால் சென்டரில் சேர்ந்து கொரோனா சேவை செய்யும் முன்னணி நடிகை

By 0 766 Views

கொரோனா அச்சத்தால் முடங்கி போயிருக்கும் நடிகை, நடிகர்கள் வெட்டியாகப் பொழுதை போக்கி அதை வீடியோவாக எடுத்து ஷேர் செய்து வரும் சூழலில் நமக்கெல்லாம் அறிமுகமான ஒரு நடிகை செய்திருக்கும் காரியம் பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது.

அவர் சசிகுமார் நடித்த ‘வெற்றிவேல்’ என்னும் படம் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை நிகிலா விமல். பிறகு அதே சசிகுமாருடன் ‘கிடாரி’ படத்தில் நடிச்சிருந்தவர் மேலும் சில படங்களில் கமிட் ஆகி இருக்கிரார்.

இதற்கிடையில் உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வரும் நிலையில் கேரளாவில் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவது தெரிந்த விஷயம்.

அதை அடுத்து நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சீராக கிடைக்கும் வண்ணம் கால் சென்டர்கள் மூலம் பல தேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரள அரசின் மூலம் இது போன்ற கால்சென்டர்களில் வேலை செய்ய ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்யப்பட்டது. இதனைப் பார்த்த மேற்படி நடிகை நிகிலா விமல் உடனே அந்த பணியில் இணைந்து கொண்டார்.

அதனையடுத்து மக்களிடம் தொலைபேசியில் பேசி, அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறதா என்ற வேலையை அவர் பார்த்து வருகிறார்.

இந்த செய்தி மலையாள ஊடகங்களில் தீவிரமாகப் பரவியது. இதனை அறிந்த ரசிகர்கள் நிகிலாவின் பரந்த மனப்பான்மையை நினைத்து பாராட்டி வருகின்றனர்.

நாமும் பாராட்டுவோம்..!