November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • ஐஸ்வர்யா ராஜேஷ்

Tag Archives

சொப்பன சுந்தரி திரைப்பட விமர்சனம்

by on April 15, 2023 0

இந்தத் தலைப்பைக் கேட்டவுடனேயே கரகாட்டக்காரன் கவுண்டமணி – செந்தில் காமெடி நினைவுக்கு வந்து விடும். அதேபோல் இது ஒரு காமெடிப் படம் என்பதும் புரிந்து விடும். ஆனாலும் ஒரு மெசேஜுடன் இந்த காமெடிப் படத்தை சொல்லி இருப்பதால் இந்தப் பட இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ்க்கு பாராட்டுகளைத் தெரிவிக்கலாம். அது என்ன மெசேஜ்..? “நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்“ என்ற குறள் சொல்லும் விளக்கமான “பிறருடைய பொருளைத் தன்னுடையதாக்க நினைத்தால் அது குற்றச் செயலாகத்தான் முடியும்…” […]

Read More

தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்பட விமர்சனம்

by on February 2, 2023 0

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்று உலகம் முழுக்க நிரூபிக்கப்பட்டு வந்தாலும், நம் நாட்டில் குழந்தை வளர்ப்பில் இருந்து போதிக்கப்பட்டு வரும் ஆணாதிக்கம் பெரும்பாலும் ஒரு பெண்ணை சமையலறைக்கும், படுக்கை அறைக்கும் மட்டுமே பயன்படுத்தி வருவது பரிதாபத்திற்குரிய விஷயம். அந்த ஆணாதிக்க மனப்பான்மைக்கு ஒரு சவுக்கடி கொடுத்த காரணத்தினாலேயே மலையாளத்தில் வெளியான ‘தி கிரேட் இண்டியன் கிச்சன் ‘ வெற்றி பெற்றது. அங்கே சமைத்த அந்த உண(ர்)வு நீர்த்துப் போகாமல் அப்படியே தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் […]

Read More

டிரைவர் ஜமுனா திரைப்பட விமர்சனம்

by on December 28, 2022 0

பெண்கள் விண்வெளிக்கே செல்லும் இந்தக் காலக் கட்டத்தில் ஒரு பெண் டாக்ஸி ஓட்டும் இந்தக் கதை புதுமையானது இல்லைதான். ஆனால் அப்படி டாக்ஸி ஓட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்வில் அவர் சந்தித்தது என்ன, சாதித்தது என்ன என்பதைப் புதுமையாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் கின்ஸ்லின். பக்கவாதம் வந்த அம்மாவுடன் வாழும் ஐஸ்வர்யா ராஜேஷ், தன் இறந்து போன அப்பா செய்த வேலையான டாக்ஸி ஓட்டுனராக இருக்கிறார். இன்னொரு பக்கம் மூவர் கொண்ட ஒரு கூலிப்படை பலரைக் கொன்று […]

Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் க்கு நள்ளிரவில் ஸ்கேன் செய்தது ஏன்?

by on August 20, 2019 0

புகழ்பெற்ற டிவிஎஸ் நிறுவனத்தின் நிறுவனர் டிவி சுந்தரம் அய்யங்காரின் கொள்ளுப்பேரன் நிக்கி சுந்தரம், இப்போது சுந்தரம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எஸ்ஏ பாஸ்கரன் இயக்கத்தில் ‘மெய்’ படத்தின் ஹீரோ ஆகிறார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனமெழுதி இயக்கும் பாஸ்கரன் புகபெற்ற இயக்குநர்கள் சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர். மனிதர்களின் உயிர் காக்கும் மருத்துவம் மற்றும் சுகாதார துறையில் இன்று மலிந்து போய் கிடக்கும் ஊழல்களை வெளிச்சம் […]

Read More

மணிரத்னம் இயக்க வேண்டிய படத்தில் உதவியாளர்

by on August 10, 2019 0

மணிரத்னம் கதை வசனத்தில் ‘வானம் கொட்டட்டும்’ படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் தனா. மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனா, ‘படைவீரன்’ படம் மூலம் இயக்குநரானார். இதையடுத்து, மணிரத்னம் கதை வசனத்தில் ‘வானம் கொட்டடும்’ படத்தை இயக்கி வருகிறார். தேனியில் வாழும் மனிதர்களை கதைக்களமாக கொண்ட இப்படத்தில் விக்ரம் பிரபு கதை நாயகனாக நடிக்கிறார். மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் விக்ரம் பிரபுவின் தங்கயையாக ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க சரத்குமார் மற்றும் ராதிகா […]

Read More

கனா லாபத்தில் விவசாயிகளுக்கு உதவி – சிவகார்த்திகேயன் அறிவிப்பு

by on January 8, 2019 0

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகி ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் ‘கனா’, கடும் போட்டிக்கு இடையே வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்று, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம்தான். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்தப் படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில்… தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் பேசியதிலிருந்து… “நடிகன் என்பதுதான் என் அடையாளம், அதுதான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் […]

Read More

கனா படத்தின் திரை விமர்சனம்

by on December 19, 2018 0

விளையாட்டை மையப்படுத்திய கதைகளுக்கெல்லாம் உலகெங்கும் ஒரே ‘டெம்ப்ளேட்’தான். ஹாக்கி, கபடி, மல்யுத்தம், கிரிக்கெட் என்று விளையாட்டுகள்தான் மாறிகொண்டிருக்குமே தவிர அடிப்படைக் கதையும் திரைக்கதையும் ஒன்றின் ‘ஜெராக்ஸ்’ தான் இன்னொன்றுக்கும். ஆனால், என்ன ஒன்று போராடி ஜெயிப்பது அடிநாதமாக இருப்பதால் படம் பார்த்து முடியும்போது ஒரு களிப்பும், நம்பிக்கையும் வரும். அது வெற்றியையும் தரும். அப்படி இதுவரை நாம் பார்த்திருகக்கூடிய அத்தனை விளையாட்டுக் கதைகளில் ஒரு தொகுப்பாக வந்திருக்கிறது ‘கனா’. மேலே குறிபிட்டது போலவே விளையாட்டுதான் ‘பெண்கள் கிரிக்கெட்’ […]

Read More