March 22, 2025
  • March 22, 2025
Breaking News
August 10, 2019

மணிரத்னம் இயக்க வேண்டிய படத்தில் உதவியாளர்

By 0 893 Views

மணிரத்னம் கதை வசனத்தில் ‘வானம் கொட்டட்டும்’ படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் தனா. மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனா, ‘படைவீரன்’ படம் மூலம் இயக்குநரானார்.

இதையடுத்து, மணிரத்னம் கதை வசனத்தில் ‘வானம் கொட்டடும்’ படத்தை இயக்கி வருகிறார். தேனியில் வாழும் மனிதர்களை கதைக்களமாக கொண்ட இப்படத்தில் விக்ரம் பிரபு கதை நாயகனாக நடிக்கிறார். மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடிக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் விக்ரம் பிரபுவின் தங்கயையாக ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க சரத்குமார் மற்றும் ராதிகா அப்பா அம்மாவாக நடிக்கிறார்கள்.

Vanam Kottattum

Vanam Kottattum

இப்படம் உருவானதன் காரணத்தைச் சொன்னார் தனா.

“என் ஊர் தேனியில் நான் சந்தித்த சில மனிதர்களைப் பற்றி மணி சாரிடம் சொல்லியிருந்தேன். அவர் அதை என்னிடமே ஒரு கதையாகச் சொல்ல, அசந்துவிட்டேன். அவரே இயக்குவார் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால், ‘படைவீரன்’ படத்துக்கு பிறகு என்னை அழைத்து, “தேனியில் வாழ்ந்த மனிதர்களை பற்றி உனக்குத்தான் நன்றாகத் தெரியும் நீ இந்தப்படத்தை செய் நான் தயாரிக்கிறேன்..!” என்றார். நடிகர்களை அவரே கூறினார். அப்படித்தான் இப்படம் துவங்கியது..!”

பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் முதல்முறையாக இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ப்ரீதா ஜெயராமன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேனியில் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.