நடிகை சனம் ஷெட்டி தயாரித்துள்ள ‘மேகி’ படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டது. ‘பிக் பாஸ் 3’ தர்ஷன் நாயகனாகும் படம் இது. விழாவில் பாத்திமா பாபு பேசும்போது,
“மேகி படத்தைத் தயாரிக்கும் சனம் ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் போது நடிகர் கமல்ஹாசனிடம் “இந்நிகழ்ச்சியில் நீங்கள் யாராக இருக்க விரும்புவீர்கள்…” என்று கேட்டபோது, “தர்ஷனாக இருக்க விரும்புகிறேன்…” என்று கூறினார்.
அதன்பிறகுதான் நான் தர்ஷனைக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் ‘குறை ஒன்றும் இல்லை‘ என்ற பாடல் வரிகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறான் என்பது புரிந்தது. நிச்சயம் இந்நிகழ்ச்சியின் வெற்றியாளனாக தர்ஷன் வருவான்.
என் வீட்டிலும் எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும். தர்ஷன் பிக் பாஸ் -3 யிலிருந்து வெளியே வந்ததும் என்னுடைய மகனாக தத்தெடுக்கப் போகிறேன்.
தற்போதுள்ள சூழலில் திரைப்படம் தயாரிப்பது என்பது சவாலான விஷயம். அதைத் துணிச்சலாக சனம் ஷெட்டி செய்திருக்கிறார். தர்ஷனை தேர்ந்தெடுத்தது புத்திசாலியான விஷயம். அவரிடம் ஒரு நாயகனுக்கு உரித்தான அனைத்தும் இருக்கிறது. இன்று முதல் பார்வை மட்டும் தான் வெளியாகியிருக்கிறது. படப்பிடிப்பு மேகாலயா போன்ற இடங்களுக்குச் சென்று நடத்தவிருக்கிறார்கள்..!” என்றார்.
தர்ஷன் அம்மா ஆவதற்கு வாழ்த்துகள்..!
Magie First Look Launch