November 26, 2022
  • November 26, 2022
Breaking News
September 30, 2022

சுஸ்லான் எனர்ஜி லிமிடெட் ₹1,200 கோடி உரிமைகள் அக் 11, 2022 இல் வெளியீடு

By 0 138 Views
  • நிறுவனத்தின் நிலுவையில் உள்ள ஈக்விட்டி பங்குகளின் எண்ணிக்கை (“ஈக்விட்டி ஷேர்ஸ்”) வெளியீட்டிற்குப் பிறகு 10,07.31 கோடியிலிருந்து 12,47.31 கோடியாக அதிகரிக்கும் (உரிமைகள் வெளியீட்டை தொடர்ந்து, முழு சந்தா மற்றும் அனைத்து அழைப்புப் பணங்களின் வரவிற்கு  இணங்க ஒதுக்கப்பட்ட ஈக்விட்டி பங்குகளை கருதிக்கொண்டு ) 
  • எங்கள் நிறுவனத்தின் 240 கோடிகள் வரையிலான பகுதியளவு செலுத்தப்பட்ட ஈக்விட்டிப் பங்குகளின் முகமதிப்பு ₹2/ (“உரிமை சம பங்குகள் ”) ஒரு உரிமை  ஈக்விட்டி பங்கிற்கு ₹5 என்ற விலையில் (ஒரு உரிமை ஈக்விட்டி பங்குக்கு  ரூ.3 பிரீமியம் உட்பட) எங்கள் நிறுவனத்தின் தகுதியான ஈக்விட்டி பங்குதாரர்களுக்கு உரிமைகள் அடிப்படையில் மொத்தமாக  ₹1,200 கோடி* வரை .

*உரிமைகள்  ஈக்விட்டி  பங்குகள் தொடர்பான முழு சந்தா மற்றும் அனைத்து அழைப்பு பணங்களின் வரவை கருதிக்கொண்டு…

  • இந்த ரைட்ஸ் ஈக்விட்டி பங்குகளுக்கான உரிமை 5:21 என்ற விகிதத்தில் இருக்கும்
  • வெளியீடு அக்டோபர் 20, 2022 அன்று முடிவு பெறும் .

மும்பை, செப்டம்பர் 28, 2022 :  திறன் அடிப்படையில் காற்றின் உதிரிபாக உற்பத்திப் பிரிவில் இந்தியாவின் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒன்றான மற்றும் சேவையின் திறனின்படி (ஆதாரம்: CRISIL அறிக்கை) இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க O&M சேவை வழங்குநர்களில் மிகப்பெரிய ஒன்றான சுஸ்லான் எனர்ஜி லிமிடெட், அக்டோபர் 11, 2022 அன்று அதன் ₹1,200 கோடி உரிமைகள் வெளியீட்டுத் தொடக்கத்தை அறிவிக்கிறது.

இந்த நிறுவனம் ரொக்கமாக 2,400,000,000 பகுதியளவு செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்குகளை , ஒரு ரைட்ஸ் ஈக்விட்டி பங்கிற்கு ₹5 விலையில் (உரிமை ஈக்விட்டி பங்கிற்கு ₹3 பிரீமியம் உட்பட) உரிமை அடிப்படையில் மொத்தம் ₹1,200 கோடி* வரை அதன் தகுதியான ஈக்விட்டி பங்குதாரர்கள், அதாவது 2022 அக்டோபர் 4, செவ்வாய் அன்று, பதிவு தேதியில், தகுதியான பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு 21 முழுமையாக

செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்குகளை , ஒரு ரைட்ஸ் ஈக்விட்டி பங்கிற்கு ₹5 விலையில் (உரிமை ஈக்விட்டி பங்கிற்கு ₹3 பிரீமியம் உட்பட) உரிமை அடிப்படையில் மொத்தம் ₹1,200 கோடி* வரை அதன் தகுதியான ஈக்விட்டி பங்குதாரர்கள், அதாவது 2022 அக்டோபர் 4, செவ்வாய் அன்று, பதிவு தேதியில், தகுதியான பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு 21 முழுமையாக செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்குகளுக்கும் 5 உரிமைகள் ஈக்விட்டி பங்குகள் என்ற விகிதத்தில் ரொக்கமாக வெளியிடும். சந்தையில் உரிமைகள் தகுதிகளை  துறப்பதற்கான  கடைசி தேதி அக்டோபர் 14, 2022 ஆகும்.

*உரிமைகள்  ஈக்விட்டி  பங்குகள் தொடர்பான முழு சந்தா மற்றும் அனைத்து அழைப்பு பணங்களின் வரவை கருதிக்கொண்டு 

வெளியீட்டு அட்டவணை

பதிவு நாள் செவ்வாய், அக்டோபர் 4, 2022
உரிமைகளுக்கான உரிமைகோரல் வரவுவைக்கப்படும்  கடைசி நாள் திங்கட்கிழமை, அக்டோபர்10, 2022
வெளியீடு திறக்கும் நாள் செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 11, 2022
உரிமைகள் உரிமைகோரல்களை சந்தையில்  துறப்பதற்கான கடைசி நாள் #   வெள்ளிக்கிழமை, அக்டோபர் 14, 2022
வெளியீட்டின் இறுதி நாள் * வியாழக்கிழமை  அக்டோபர் 20, 2022

 

# தகுதியான ஈக்விட்டி பங்குதாரர்கள், வெளியீடு முடிவுறும் நாள்  அல்லது அதற்கு முன்னதாக, துறந்தவர்களின் டீமேட் கணக்கில் உரிமைகள் உரிமைகோரல்கள்  வரவு வைக்கப்படும் வகையில், சந்தைக்குப் புறம்பான பரிமாற்றம் மூலம் துறத்தல் நிறைவு செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* எங்கள் வாரியம் அல்லது அதன் முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட குழு, வெளியீட்டுத் தேதியிலிருந்து (வெளியீடு தொடங்கும் தேதி உட்பட) 30

நாட்களுக்கு மிகாமல், அவ்வப்போது அது தீர்மானிக்கலாம் என்பதால், வெளியீட்டு காலத்தை நீட்டிக்க உரிமை உண்டு. மேலும், வெளியீடு முடிவுறும் தேதிக்குப் பிறகு எந்தவொரு விண்ணப்பதாரராலும் விண்ணப்பத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கப்படாது.

மேம்படுத்துநர் மற்றும் மேம்படுத்துநர் குழு தங்கள் பங்கேற்பை உறுதி செய்துள்ளது மேலும் அவர்கள் தங்கள் உரிமைகள் உரிமைகோரல்கள்  அளவிற்கு முழுமையாக சந்தா செலுத்துவார்கள்.

வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியானது, எங்கள் கடன் வழங்குபவர்களிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்கு உட்பட்டு,  நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களால் பெறப்பட்ட சில நிலுவையில் உள்ள  கடன்களின் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்துவதற்கோ  அல்லது முன்கூட்டியே செலுத்துவதற்கோ  மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படும்.

இங்கா வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்த வெளியீட்டின் முன்னணி மேலாளராக உள்ளது.