September 15, 2025
  • September 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நாங்கள் திரையரங்குகளை புறக்கணிக்கவில்லை – தெளிவுபடுத்தும் சூர்யா
May 27, 2020

நாங்கள் திரையரங்குகளை புறக்கணிக்கவில்லை – தெளிவுபடுத்தும் சூர்யா

By 0 695 Views

‘பொன்மகள் வந்தாள் ‘ படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடுவது ஏன் என்பது குறித்து சூர்யா அளித்திருக்கும் ஜூம் பேட்டியில், “தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளை பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

எனவே மாற்று வழியை நோக்கி நகர்வது மிகவும் அவசியமானதாகும். குறிப்பாக மாற்று சினிமாக்களுக்கு ஓடிடி நல்ல தளமாக உள்ளது.

இதனால் நாங்கள் திரையரங்குகளை புறக்கணிக்கிறோம் என்று அர்த்தமல்ல.

திரையரங்குகளில் கிடைக்கும் ஆரவாரத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் ஈடே கிடையாது. அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் தள்ளி வைக்க முடியாது.

இந்த கொரோன வைரஸ் பாதிப்பு குறைந்து தியேட்டர்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும், படப்பிடிப்புகள் எப்போதும் மீண்டும் தொடங்கும் என்பதை உறுதியாக கூற முடியவில்லை.

இந்த நிலைமை மாற குறைந்தபட்சம் இன்னும் இரண்டு மாதங்களாவது ஆகும் என நினைக்கிறேன்..!” என்று தெரிவித்திருக்கிறார்.

நியாயம்தானே..?