June 6, 2023
  • June 6, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மீடியாவை தகாத வார்த்தைகளால் வசை பாடும் இசை வாரிசு
May 27, 2020

மீடியாவை தகாத வார்த்தைகளால் வசை பாடும் இசை வாரிசு

By 0 553 Views

Sean Roldanதமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஷான் ரோல்டன் –

பிரபல எழுத்தாளர் சாண்டில்யனின் மகனும், மிருதங்க வித்வான் ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜா ராவின் மகனுமான இந்த ஷான் ரோல்டன் முண்டாசுப்பட்டி, ஜோக்கர், வேலையில்லா பட்டதாரி 2, மெஹந்தி சர்க்கஸ் போன்ற பல படங்களுக்கு இசை    அமைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் பெருகிவிட்ட இந்த தமிழ் சினிமா சூழலில் எல்லா இசையமைப்பாளர்களும் இணக்கமான போக்கை கடைபிடித்து வர இவர் மட்டும் மீடியாக்களை கண்டால் சமுதாய இடைவெளி ஏற்படுத்திக் கொள்கிறார்.

இதனால் கடுப்பான ஏதோ ஒரு மீடியா இவரை பற்றிய தவறான தகவல்களை வெளியிட, பிடித்துப்போன ஷான் ரோல்டன் தன் ட்விட்டர் பக்கத்தில் மீடியாக்களை தகாத வார்த்தைகளால் வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டிருக்கிறார்.

யாருடன் பிரச்சனையோ அவர்களுடன் பேசி சுமுகமாக பிரச்சனையை தீர்த்துக் கொள்வது ஒன்றுதான் சரியான வழியாக இருக்கும் அதை விடுத்து பொது விதிகளை இப்படி தகாத வார்த்தைகளால் மீடியாக்களை திட்டும் போது அவர் பெயர் மட்டுமல்லாமல் அவரைச் சார்ந்த பாரம்பரிய குடும்பத்தின் பெயரும் தேவையில்லாமல் கெட்டுப்போகும்.

அதை உணர்ந்து தன் தவறை திருத்திக் கொண்டால் நல்லது. அவர் போட்டிருக்கும் டிவிட்டுகள் கீழே…