July 1, 2025
  • July 1, 2025
Breaking News
October 27, 2019

சூர்யா வில்லன் டெல்லி விமான நிலையத்தில் கைது

By 0 925 Views
Ola Jason

Ola Jason

சூர்யா நடித்த ‘சிங்கம் 3’ படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர் நைஜீரியாவைச் சேர்ந்த ‘ஓலா ஜேசன்’. இவர் தமிழ்ப்படம் மட்டுமல்லாது அமீர்கானின் ‘தங்கல்’, மன்மோகன் சிங் வாழ்க்கை கதையான ‘ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’, ‘கேரி ஆன் கேசார்’, ‘ராக் தேஷ்’ உள்ளிட்ட இந்திப் படங்களிலும் நடித்தவர்.

 
இவர் சமீபத்தில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றிக்கொண்டு இருந்தார். அதனால், அவர் மீது விமான நிலைய பாதுகாப்பு படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
 
இதையடுத்து பாதுகாப்பு படையினர் ஓலா ஜேசனை அழைத்து விசாரணை நடத்தினர். அவரது உடமைகளையும் ஆய்வு செய்தனர்.
 
அப்போது அவர் விமானத்தில் கோவா செல்வதற்கான டிக்கெட்டை வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அவரது விசா கடந்த 2011-ம் ஆண்டிலேயே முடிந்து போய் விட்டதும் தெரிய வந்தது.
 
விசா முடிந்தும் அவர் இந்தியாவிலேயே வசித்து வந்ததும் தெரிய வந்தது. அதனையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின்னான பதில்களை அவர் தெரிவித்ததால் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
 
மேலும் அவரிடம் தற்போது உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.