December 1, 2025
  • December 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பார்ட்டி சார்லி சாப்ளின்2 படங்களை வாங்கிய சன்டிவி
September 13, 2018

பார்ட்டி சார்லி சாப்ளின்2 படங்களை வாங்கிய சன்டிவி

By 0 1023 Views

‘அம்மா கிரியேசன்ஸ்’ டி.சிவா பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கும் படங்கள் பார்ட்டி மற்றும் சார்லி சாப்ளின் 2

வெங்கட்பிரபு இயக்கி இருக்கும் ‘பார்ட்டி’ படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருப்பதாலும் இயக்குனரின் முந்தைய படங்கள் வெற்றி பெற்றிருப்பதாலும் வியாபார ஆதரவு கிடைத்திருக்கிறது…

அதே போல இன்னொரு படமான சார்லி சாப்ளின் 2 படத்துக்கும் வியாபார ஆதரவு பெருகக் காரணம் ஏற்கெனவே ஷக்தி சிதம்பரம் இயக்கி வெற்றி பெற்ற சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் நடித்த அதே பிரபுதேவா பிரபு உட்பட பல நட்சத்திரங்கள் இதில் பங்கு பெற்றிருக்கிறார்கள் என்பதுதான்.

இதன் உச்சமாக இந்த இரண்டு படங்களின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கி இருக்கிறது. எனவே, பார்ட்டி, சார்லி சாப்ளின் 2 படக்குழுவினர் மகிழ்ச்சியாக உள்ளனர்.